Krishnagiri

News May 10, 2024

கிருஷ்ணகிரி: 499 மதிப்பெண் எடுத்து மாணவி முதலிடம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் இருமத்தூரில் இயங்கிவரும் ஐ.வி.எல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கு.தேவதர்ஷினி 499 மதிப்பெண்கள் பெற்றார். தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட நான்கு பாடங்களில் நூற்றுக்கு 100 மதிப்பெண்களுக்கும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவருக்கு பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 10, 2024

மாபெரும் கிரிக்கெட் போட்டி

image

காவேரிப்பட்டிணம் அடுத்த சுண்டகாபட்டி காந்தி கிரிக்கெட் கிளப் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 12 மணி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்டத்தில் உள்ள மட்டைப்பந்து வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் 8 பரிசுகள் வழங்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளனர்.

News May 10, 2024

10th RESULT: கிருஷ்ணகிரியில் 91.43% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 91.43% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.22% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.09) கனமழை பதிவாக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

கிருஷ்ணகிரி: திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கண்ணன்டஹள்ளி நான்கு ரோட்டில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்எல்ஏ தே. மதியழகன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, இளநீர், மோர், நுங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

News May 9, 2024

வெப்பச்சலன விழிப்புணர்வு: ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் எரிசக்தி துறை பீலா வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு முன்னிலையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் என்னும் மையத்திற்கான அதிமுக முகவர் பொறுப்பாளர்களை நியமிப்பது மற்றும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆலோசனை வழங்கினார். அதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஆளுநர்

image

பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் செல்லும் வழியில், கிருஷ்ணகிரி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கர்நாடக ஆளுநர் திரு. தவார் சந்த் கெலாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 08.05.2024 மலர் கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை உள்ளார்.

News May 8, 2024

சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

image

தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகளை நடத்தி வந்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: மழையால் கிரிக்கெட் போட்டி ரத்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக இன்று நடக்கவிருந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதிகாலை பெய்த மழையினால் கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளியில் அமைந்துள்ள மாவட்ட சங்க கிரிக்கெட் மைதானம் முழுவதும் விளையாட முடியாத அளவிற்கு
தண்ணீர் தேங்கியதால் ஆட்டங்களை ரத்து செய்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!