India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம்.
கிருஷ்ணகிரி புத்தக பேரவை அமைப்பின் சார்பாக இன்று மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புத்தக பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் ரவி அவர்கள் கலந்துக்கொண்டு திப்புசுல்தான் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பேசினார். கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி புத்தக பேரவை அமைப்பின் சார்பாக இன்று மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புத்தக பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் ரவி அவர்கள் கலந்துக்கொண்டு திப்புசுல்தான் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பேசினார்.
கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லியூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்த விலகி ஒசூர் மாநகராட்சி, தளி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக ஒசூர் M.L.A பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 0ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி மாணவி பூவிதா 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் மாணவன் தினேஷ் 490 மதிப்பெண்களும், மாணவி கலையரசி 483 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசஜ்ஜூர் மலை கிராமத்தில் வசிப்பவர் வஜ்ரவேல். இவர் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி. தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம்100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கிருஷ்ணகிரி, சூளகிரியில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோயில். பல்வேறு காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது இக்கோயில். கர்ப்பகிரகம் சோழர்களால் கட்டப்பட்டது. புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில், சூளகிரி மலை திரிசூலத்தை (தமிழில் சூலம்) போல இருப்பதால், இந்த இடம் காலப்போக்கில் ‘சூளகிரி’ என்று பெயர் பெற்றது.தொன்மையான இக்கோயில் சிறிய குன்றின் மேல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளி பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 493 முதல் மதிப்பெண் பெற்ற ஜோசிகா, இரண்டாம் மதிப்பெண் 489 பெற்ற தனிகா, மூன்றாம் மதிப்பெண் 485 பெற்ற தாசினா ஆகிய மூவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை கூறி பாராட்டுகளை தெரிவித்தனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.9% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.64 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் 22ஆவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.