India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தூரில் நேற்று தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவிலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்த அதே இடத்தில் தினமும் ஒரு டூவீலர் அல்லது கார் ஏதாவது ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது.
கிருஷ்ணகிரி மலை மேல் அமைந்துள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று காட்டு முனியப்பன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு முனியப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நாளை ஆடுகள் வெட்டி விருந்து அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்தமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (17.05.2024) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர்கள் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 24 25 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை கிருஷ்ணகிரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கிருஷ்ணகிரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உட்பட்டனர். இதனால் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர ஆணையாளர் ஒரு வாரத்தில் தண்ணீர் ஏற்பாடு தருவார் என்று உறுதி கூறியுள்ளார். அதன்பிறகு பொதுமக்கள் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு சார்பாக சட்டம் சார்ந்த பொதுமக்கள் தங்களது சந்தேகங்களுக்கு 15100 என்ற எண்ணை 24 மணி நேரமும் இலவசமாக தொடர்பு கொண்டு சட்ட விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் திருமதி. ஹேமலதா, மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.