Krishnagiri

News January 18, 2026

கிருஷ்ணகிரி: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு நேரில் சென்று கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: ரூ.5லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: 3 பவுன் நகை தகராறில் வாலிபர் கைது!

image

கிருஷ்ணகிரி, பானாக்கார தெருவைச் சேர்ந்த வளையல் வியாபாரி அலமேலுவிடம், 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 3 பவுன் தங்கச் சங்கிலியைத் திருப்பித் தராதது குறித்துக் கேட்டபோது, அவரது அண்ணன் மகன் பிரபாகரன் (22) அவரை கல்லால் தாக்கி மிரட்டினார். பின், காயமடைந்த அலமேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பிரபாகரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 18, 2026

கிருஷ்ணகிரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: பண விவகாரத்தில் முற்றிய பகை – இருவர் கைது

image

ராயக்கோட்டையில் விஐபி நகரை சேர்ந்த விஜி 22 என்பவருக்கும் கும்மனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கடந்த ஜன-15 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் சேகர் 21,ராஜதுரை 23 இருவரும் விஜியை தாக்கியதால் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஜன-16 அன்று 2 பேரையும் இராயக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

News January 18, 2026

ஓசூர் மக்களின் கனவில் இடி!

image

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. ஓசூர் வான்வெளிப் பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதைக் காரணம்காட்டி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓசூர் மக்களின் நீண்ட கால விமானப் போக்குவரத்து கனவு & தொழில் வளர்ச்சித் திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

News January 18, 2026

கிருஷ்ணகிரி சாலையில் கோர விபத்து!

image

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை கிராமத்தை சேர்ந்த ராஜா 29 என்பவர் நேற்று ஜன-17 காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி.17) ’சாலைவிதிகளை கற்றுத்தருவோம் நமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!