Krishnagiri

News January 19, 2026

கிருஷ்ணகிரி: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கிருஷ்ணகிரி: உடல் கருகிய நிலையில் ஆண் சடலம்!

image

சூளகிரி அடுத்த சின்னார் பேடப்பள்ளி கிராமத்தில் இன்று (ஜன.19) காலை வயல்வெளியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: தூக்கில் தொங்கிய மாணவி!

image

தளி அருகே சாரண்டப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகள் பல்லவி (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.20) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பரண்டூர், நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, கூலிசந்திரம், முதுகனபள்ளி, செட்டிபள்ளி, மாசினாயக்கன்பள்ளி, உத்தனபள்ளி, அகாரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லரலபள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன -18) இரவு 10 மணி முதல் இன்று காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

கிருஷ்ணகிரி: மரண பயத்தை போக்கும் காலபைரவர் கோயில்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கியில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இங்கு மூலவராக காலபைரவர் இருக்கிறார். இங்கு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே இங்கு உள்ள லிங்கத்தைக் காண இயலும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு வழிபடுவது மூலம் மரண பயம், கடன் ஆகியவை நீங்கும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

தளி அடுத்த சரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பல்லவி (14), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர் வயிற்றுவலி, தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஜன-17 வீட்டில் தனியாக இருந்த பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

கிருஷ்ணைரி: 12th, டிப்ளமோ, ITI படித்தவரா நீங்கள்…

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 18, 2026

கிருஷ்ணகிரி பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <>தாட்கோ <<>>இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!