Krishnagiri

News June 9, 2024

ஓசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

image

தேன்கனிக்கோட்டையை அடுத்த பென்னாங்கூா், அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி மக்கள் வெளியேவர அச்சமடைந்துள்ளனா். கடந்த ஜூன் 7 இரவு அடவிசாமிபுரம் பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தை கொன்றதற்கான அடையாளம் தென்பட்டது. இதையடுத்து வனத்துறையினா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

News June 9, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதி மன்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது. இதில்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

News June 8, 2024

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை

image

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முதல் கிருஷ்ணகிரி அதன் சுற்று வட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மேகம் சூழ்ந்து மழை பெய்து தொடங்கியது. அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 8, 2024

பத்ரகாளியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

image

போச்சம்பள்ளி அடுத்த கோடிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவிலில் 114 ஆம் ஆண்டு மகா பிரம்மோற்சவ விழா வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கேட்டதை கொடுக்கும் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜூன்10 பள்ளிகள் திறப்பதாலும் , தேர்தல் விதிமுறைகள் முடிவடைந்ததாலும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News June 8, 2024

நாளை மறுநாள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 6-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனவே வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் தாலுகாக்களில் நடைபெறும் உங்களை தேடிஉங்கள்ஊரில் திட்டம், கலெக்டரின் மக்கள் தொடர்புதிட்டமுகாம் ஆகியவை நடைபெறும். என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News June 8, 2024

கிருஷ்ணகிரி: குரூப் 4 தேர்வில் 41,325 பேர் பங்கேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நாளை(ஜூன் 9) நடைபெறுகிறது. மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் உள்ள 131 மையங்களில் 41,325 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு தொடர்பான பணிகளை கண்காணிக்க அனைத்து தாலுகாவிலும் துணை கலெக்டர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News June 8, 2024

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, அவர்கள் தலைமையில் நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க், ஓசூர் சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News June 7, 2024

கிருஷ்ணகிரி: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் அறிவிக்கப்படும் தேதிகளில் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10ம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது. கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து தடுப்பூசியை தங்களின் கால்நடைகளுக்கு போட்டு பயன் பெற வேண்டுமாறு கலெக்டர் சரயு தெரிவித்தார்.

News June 7, 2024

 உற்பத்தி காளான் பயிற்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்.

image

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று சுற்றுச் சூழல் மையம், மரக்கன்று நடவு மற்றும் உற்பத்தி காளான் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கி வைத்து வளர்ப்புக் குடிலை பார்வையிட்டார். இந்த விழாவில் கல்லூரி முதன்மை அலுவலர் முனைவர். அனீசா ராணிஅவர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

error: Content is protected !!