India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே<

கிருஷ்ணகிரி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஷாலினி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேற்று (ஜன.21) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமன்னா (45). இவர் நேற்று (ஜன.21) இரவு சந்தையில் கடையின் முன்பு தூங்கியுள்ளார். ஆனால் இன்று காலை (ஜன.22) இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <

கிருஷ்ணகிரி மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு<

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

ராயக்கோட்டை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகன் (40), ரமணி (35). இந்நிலையில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் நேற்று (ஜன.21) இரவு மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். மேலும் பணம் தாராத மகள் மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து ரமணி அளித்த புகாரின் பேரில் இன்று (ஜன.22) காலை போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி மாநில விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த விருதுக்குத் தகுதியுள்ளவர்கள், பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, அதன் நகலை கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.23) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதன்படி கிருஷ்ணகிரி நகரம், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு, கலெக்டர் அலுவலகம், ஓல்ட்பேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கதேரி, ஆலப்பட்டி, சூலக்குண்டா ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று (ஜன.21) கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.