Krishnagiri

News January 23, 2026

கிருஷ்ணகிரி: 14கிலோ கஞ்சாவுடன் வடமாநில இளைஞர்கள் கைது

image

ஊத்தங்கரை நகர் பகுதியில் ஜன-23 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த உமர் பாராக் 21, மசூத் 20 இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

கிருஷ்ணகிரி: EB பில் எகுறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

அலியாளம் அணைக்கட்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

அஞ்செட்டி பகுதியில் உள்ள அலியாளம் அணைக்கட்டில் இருந்து 8 கிமி தூரம் வழுக்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் வரும் உபரி நீரை சூளகிரி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் ஜன-23 ஆய்வு செய்தார். இந்த திட்டம் மூலம் 12 ஏரிகள் நீர்பாசன வசதியை பெறவும் தர்மபுரி மாவட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: சொந்த தொழில் தொடங்கணுமா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.m<>smeonli<<>>ne.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

கிருஷ்ணகிரியில் பரிதாப பலி!

image

கங்கசந்திரத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்கச் சென்ற லட்சுமி நாராயணன் (56) என்ற தொழிலாளி, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். ஏற்கெனவே கடந்த 17-ஆம் தேதி காவேரிப்பட்டணம் அருகே இளவரசன் என்பவர் இதேபோல் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது பலியாக லட்சுமி நாராயணன் மரணமடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

கிருஷ்ணகிரி: வழி தகராறில் பறிபோன உயிர்!

image

கெலமங்கலம் அடுத்த கோனேரிப்பள்ளியை சோ்ந்த முனிமாரப்பா (41), முனிகிருஷ்ணன் (42) ஆகிய இருவருக்கும் வீட்டு வழி பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஜனவரி 21-ம் தேதி ஏற்பட்ட தகராரில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் முனிமாரப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் முனிகிருஷ்ணணனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: JCB ஏற்றி கொல்ல முயற்சி!

image

ஆனந்தூர் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் பேரில் ஊத்தங்கரை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொக்லைன் மூலம் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் (47), தங்கபாலு (35) ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

News January 23, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (22.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும், அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!