Krishnagiri

News January 22, 2026

கிருஷ்ணகிரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: அரசு பயிற்சி மையத்தில் சந்தன மரம் கடத்தல்

image

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி மைய வளாகத்தில், ஜன-20 நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தினர். இது குறித்து மையக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலக வளாகத்திலேயே பாதுகாப்பு மீறப்பட்டு மரம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: உடல் நசுங்கி பலி!

image

கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகே நிகழ்ந்த பயங்கர விபத்தில், கோபசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த லாரி அவர் மீது ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது. தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 22, 2026

ஓசூரில் துடிதுடித்து பலி!

image

ஓசூர் அடுத்த அலசநத்தம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி முரளிதரன் 62 ஜன-21 காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” இன்று (22.01.2026) செவங்கலம் வட்டம், இருதுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெற அழைப்பு.சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

News January 22, 2026

கிருஷ்ணகிரி பகுதிகளில் கிராம சபை கூட்டம்

image

தமிழகத்தில் வரும் ஜன-26 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கூட்டங்களை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தவும், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 22, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வங்கி மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி அதிகாரிகள் என கூறி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏடிஎம் அட்டை எண், ஓடிபி, பின் நம்பர் போன்ற தகவல்களை கேட்பது மோசடி என தெரிவித்துள்ளனர். எந்த வங்கியும் இத்தகவல்களை தொலைபேசி மூலம் கேட்காது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக துண்டித்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

News January 22, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

image

உத்தனப்பள்ளி அருகே சாமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரவின் குமார் (18) அதே பகுதியை சேர்ந்த மாலிக் கூரான் (18) ஆகிய இருவரும் நேற்று உத்தனப்பள்ளி – சூளகிரி எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், பிரவின் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மாலிக் கூரான் படுகாயம் அடைந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டை உள்ளதா? சூப்பர் சான்ஸ்

image

கிருஷ்ணகிரியில் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம் ஜன.24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பாப்பாரப்பட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும்.

News January 22, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டை உள்ளதா? சூப்பர் சான்ஸ்

image

கிருஷ்ணகிரியில் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம் ஜன.24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பாப்பாரப்பட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும்.

error: Content is protected !!