India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, KPR அணையில் 7 செ.மீட்டரும், கேளவரப்பள்ளி அணையில் 5 செ.மீட்டரும், ஒசூர் AWS, பாமர் அணை ஆகிய பகுதிகளில் 4 செமீட்டரும், தேன்கனிக்கோட்டையில் 3 செமீட்டரும், கிருஷ்ணகிரி, பெனுகொண்டபுரம், சின்னார் அணை, ஜம்புகுட்டபட்டி, பரூர், பையூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் நாதக சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,07,083 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் என்பதால் நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக தொண்டர்களை அழைக்கவும் அதிமுக பற்றி பேசவும் ஓபிஎஸ்ஸுக்கு உரிமையில்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றது, அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி அமைத்து இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு என்ன உரிமையுள்ளது என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் நாதக சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1,07,083 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் என்பதால் நாம்தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பா்கூா் வேளாங்கண்ணி அகாடமியில் 2024ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். வேளாங்கண்ணி அகாடமி மாணவா் எஸ்.நரேன் காா்த்திகேயன் 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எஸ்.பூவிழி 683 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், எஸ்.காா்த்திகாதேவி 681 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு, ஓசூர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓசூரில் மிகப்பெரிய நீா் ஆதாரமாக விளங்கும் ராமநாயக்கன் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் குவிந்து கிடந்த ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மேயா் எஸ்.ஏ.சத்யா துணை மேயா் சி.ஆனந்தைய்யா தொடங்கிவைத்தனா். இதில் மாமன்ற உறுப்பினா் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி எம்பியாக இதுவரை ஓசூரை சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்பட்டதில்லை. இதுவரை வெளியூர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், கிருஷ்ணகிரி எம்.பி.யாக வெற்றிபெற்றிருந்தனர். இந்நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றதன் மூலம் ஓசூரைச் சேர்ந்த ஒருவர், கிருஷ்ணகிரி எம்பி ஆவது இதுவே முதல் முறை என்பதால் ஓசூர் மக்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.