India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘ஆற்றல் மன்றம்’ ஒருநாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் குத்துவிளக்கேற்றி இப்பயிற்சியைத் தொடங்கி வைத்தார். எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு இதில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்தியதேவி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குருபரப்பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோத்தித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக குழு அலுவலகங்களை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் ஓசூரின் முதல் மேயர் எஸ்.ஏ. சத்யா ஆய்வு செய்தார். அலுவலக வசதிகளை பார்வையிட்டு, சிறந்த நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான சேவைகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த முயற்சி நிர்வாக செயல்திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவி ரூபாவை கழுத்தறுத்துக் கொலை செய்தார். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விழைந்த இந்த கொடூர வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் நேற்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி சுதா, கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்த குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனையுடன், 3 ஆண்டு சிறை மற்றும் ₹6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் இன்றைய (பிப்.8) நீர்மட்டம் மொத்த 52 அடியில் 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை அருகே ஆலஅள்ளி கிராமத்தில் பெங்களூருவை சேர்ந்தவருடைய பண்ணையின் மின்வேலி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று (பிப்.11) மதியம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அப்பகுதி கோழிப்பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மன்மதநாயக் (26) என தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.