India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜே பி பிரகாஷ் இன்று (மார்ச்.25) அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்போம் என தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டித்து, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஒசுர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தீவிரமடைந்தால், கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்கள் திரையிட விடமாட்டோம், எல்லைப்பகுதிகளை அடைப்போம் என எச்சரித்தனர்
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபிநாத் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து 20 நாள்களில் மறு எண்ணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமண சங்கம் ஓசூர் கிளை சார்பில் சுவா சினி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து ஆரம்பித்த இந்த பூஜை கன்யா பூஜை, குத்துவிளக்கு பூஜை, சுவாசினி பூஜையுடன் இனிதே நடைபெற்றது. தாம்பிராஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் குகை சுவாமிகள் ஸ்ரீ சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரியில் வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் அடுத்துள்ள பாரந்தூர் சாலையில், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது. பூனப்பள்ளி வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான 240 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த பாரந்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக கே.கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 23.03.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.