Krishnagiri

News March 21, 2024

எம்பி தேர்தல்: அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை

image

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு
தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

கிருஷ்ணகிரி அருகே கோயில் கும்பாபிஷேகம்

image

பர்கூர் அருகே கப்பல்வாடியில் சீனிவாச பெருமாள், கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. நேற்று சீனிவாச பெருமாள், பாலமுருகன், ஓம் சக்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 20, 2024

குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

image

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 20, 2024

கிருஷ்ணகிரி காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் டாக்டர் செல்லக்குமார் போட்டியிட வேண்டி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News March 20, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, கிருஷ்ணகிரி எம்பி தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வி.ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

கிருஷ்ணகிரி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

வாடமங்கலம் கிராமத்தைச் கோவிந்தசாமி என்பவரின் மகன் சந்தோஷ்குமார் தனியார் பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து வீட்டின் மீது விழுந்தது. பந்தை எடுக்க அங்கிருந்த குழாய் ஐ பிடித்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 19, 2024

கண்காணிப்பு குழு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒட்டி, 24 மணி நேரமும் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை (MCMC) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!