Krishnagiri

News February 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

கிருஷ்ணகிரி: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

கிருஷ்ணகிரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

கிருஷ்ணகிரி: இலவச AWS AI பயிற்சி!

image

தாட்கோ சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியின பட்டதாரி இளைஞர்களுக்கு (18-30 வயது) 2 மாத இலவச Amazon AWS AI Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ₹3L-க்குள் இருக்க வேண்டும். சான்றிதழ் & வேலைவாய்ப்பு உதவி உண்டு. உடனே விண்ணப்பிக்க: www.tahdco.com. இது உங்கள் கரியரை மாற்றும் நல்வாய்ப்பு!கிருஷ்ணகிரி: இலவச AWS AI பயிற்சி!

News February 19, 2026

கிருஷ்ணகிரி: உங்கள் விரல் நுனியில் வங்கி விபரம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

கிருஷ்ணகிரி: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா? கவனம்!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

பாஜக பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் ஓசூர் ஒன்றிய அலுவலகம் அருகே, நேற்று (பிப்.18) கண்டன ஆர்ப்பாட்ட நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு மற்ற திட்டங்களுக்கு திருப்பியதாகவும், இட ஒதுக்கீடு உரிமைகளை அரசு மதிக்கவில்லை என கோஷங்களை எழுப்பினர்.

News February 19, 2026

ஆவலப்பள்ளியில் பயங்கர தகராறு!

image

ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சாமுவேல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூவேந்தர் என்பவருக்கும் இடையே வழிபிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18) அவ்வழியாக வந்த சாமுவேலின் காரை வழிமறித்து மூவேந்தர் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் மூவேந்தர், சந்திரன் ஆகியோர் மீது போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2026

பட்டப்பகலில் டீ கடையை அடித்து நொறுக்கி அட்டூழியம்!

image

ஊத்தங்கரை அடுத்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் வாளகத்தில் ஜெயந்தி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இவர் கடையின் குத்தகை காலம் முடிந்து கடையை காலி செய்ததால், நேற்று (பிப்.18) 4 பேர் கடையை காலி செய்ய சொல்லி தகராறில் ஈடுபட்டனர். மேலும் கடையிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சொக்கலிங்கம், கணபதி, சரவணன், முரளி ஆகிய4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!