Krishnagiri

News February 19, 2026

தேன்கனிக்கோட்டையில் 42 பேர் காயம்! நடந்தது என்ன?

image

தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டை–கல்லுப்பாலை பகுதியில் அமைந்துள்ள மகாதேஸ்வரா சாமி கோயிலில் நேற்று (பிப்.18) எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றிருந்தது. இந்நிலையில் காளைகளை விடும்போது சில இளைஞர்கள் பாதுகாப்பு தடைகளை இழுத்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் விழாவில் பங்கேற்ற 42 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர்.

News February 19, 2026

குடிபோதையில் அட்டூழியம்; 4 பேர் மீது வழக்கு!

image

வேப்பனப்பள்ளி அடுத்த சிரனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். நேற்று (பிப்.18) பிரேமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருதரப்பின் அளித்த புகாரின் பேரில் பிரேம்குமார், சுப்பிரமணி, சந்தோஷ், சம்பத், பூபதி என இருதரப்பை சேர்ந்த நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News February 19, 2026

மைதானத்தில் வாலிபர் ரோமன்ஸ்; காவலாளிக்கு அடி உதை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வருபவர் துரைசாமி. இவர் நேற்று (பிப்.18) மாலை பணியில் இருந்தபோது மைதானத்தில் இளைஞர் ஒருவர் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களை காவலாளி வெளியே வருமாறு அழைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் துரைசாமியை சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

கிருஷ்ணகிரியில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.20) நடைபெற உள்ளது. இதன்படி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். மேலும் இதில் அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

News February 19, 2026

கிருஷ்ணகிரிக்கு GOOD NEWS!

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.20) நடைபெற உள்ளது. இதன்படி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். மேலும் இதில் அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

News February 19, 2026

கிருஷ்ணகிரி கொப்பரை தேங்காய் ஏலம்

image

ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வர்த்த முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைப்பெற்றது. இதில் 10 அரை குவிண்டால் கொப்பரை ஏலத்திற்கு வந்தது. இதில் அதிகபட்சமாக 177.20 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 111 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News February 19, 2026

கிருஷ்ணகிரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்-20 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

கிருஷ்ணகிரியில் கூண்டோடு கைது!

image

கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 15-வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய அண்ணா சிலை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 260 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

News February 19, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.19) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

error: Content is protected !!