India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி அடர்வனப்பகுதியாக உள்ள நிலையில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை கிராம பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களிலேயே சுற்றி வருகிறது. இந்நிலையில் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா (55) என்பவர் இன்று காலை தனது விளைநிலத்திற்கு சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.
பர்கூர் போலீசார் மேல் வெங்கடாபுரம் பகுதியில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பர்கூர் மகேந்திரன் (51), துரைஸ் நகர் சுரேஷ்குமார் (41). குண்டியால்நத்தம் ரமேஷ் (37), எண்டுசெட்டி தெரு சந்திரசேகரன் (45), சிவக்குமார் (47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பிரபல “கிருஷ் டான்ஸ் அகாடமி” மாணவர்கள் 02.04.2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள “நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்கள். இதில் சுமார் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடி கின்னஸ் சாதனை முயற்சி செய்யப்போகிறார்கள். இதில் கிருஷ்ணகிரி சார்பில் 100 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றிபெற அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
தளி போலீசார் பீலாளம் சாலை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று (ஏப்ரல் 30) ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும், வீடு புகுந்த கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புளியாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (45). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போலீசார் தனிப்படை அமைத்து, பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று மத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரியில், ஊரக வளர்ச்சிதுறை சார்பில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ராயக்கோட்டை அருகே உள்ள சின்னதப்பை, மதகேரி பகுதியிலுள்ள மலை மற்றும் காடுகளில் வன விலங்குகள் உள்ளன. இவ்வாறாக இருந்த புள்ளிமான் இரை மற்றும் தண்ணீர் தேடி இன்று காலை சின்னதப்பை கிராம பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வாகனம் மோதியதில் படுகாயமடைந்து எழ முடியாமல் உள்ளது. அதை அப்பகுதி மக்கள் கட்டிவைத்துள்ளனர். எனவே வனத்துறையினர் மானை மீட்டு சிசிச்சையளிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரகப் வளர்ச்சி துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் கோடைக் காலத்தை முன்னிட்டு சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தலைவர் கே.எம் சரயு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா இ.ஆ.ப அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டார்கள்.
Sorry, no posts matched your criteria.