Krishnagiri

News August 6, 2024

கால அவகாசம் நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024- 25 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு ஆக 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

சீர் மரபினருக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த
சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்விக்கான அதிகாரமளித்தல், சிறப்பு காப்பீடு திட்டம், நிலம் மற்றும் வீடு கட்ட நிதி அளித்தல் திட்டத்தில் பயன்பெற மத்திய அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆட்சியர் அலுவலக அறை எண்11ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

கெலமங்கலம் அருகே விவசாயியை கொன்றவர் கைது

image

கெலமங்கலம் அருகே காமையூரைச் சேர்ந்த விவசாயிக்கு 17 வயது மகள் இருந்தார். அவரை வெங்கட் ராஜ் என்பவர் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் நேற்று முன்தினம் சிறுமியை கடத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அவரை கெலமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறுமியை மீட்டனர்.

News August 6, 2024

மக்களைத் தேடி மருத்துவம் 4ஆம் ஆண்டு தொடக்க விழா

image

சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5.8.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 4ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் ஆட்சியர் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 162 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் உடன் இருந்தார்.

News August 5, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றிரவு 2 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களின் விவரம்.
ஊத்தங்கரை – 949816822, போச்சம்பள்ளி – 9498175515, கிருஷ்ணகிரி – 9498104224, 9498102065, ஓசூர் – 9787733968, 9842788031, தேன்கனிக்கோட்டை – 949816367 பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

கலைஞர் நினைவு நாள் ஓசூர் எம்எல்ஏ அறிக்கை

image

கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் வரும் புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்று கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. இதி, சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ம) சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

News August 5, 2024

மாநில விளையாட்டுப் போட்டியில் கிருஷ்ணகிரி மாணவிகள் சாதனை

image

திருவண்ணாமலை ஸ்ரீ ரேணுகாம்பாள் உடற்கல்வி கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி காத்தாம்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியை சேர்ந்த 60 மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ஆம் ஆண்டு மாணவி லாவண்யா யோகாவிலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி கீர்த்திகா முதலிடமும், 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மாணவி மைத்ரேயி முதலிடமும் பெற்றனர்.

News August 5, 2024

மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாணவி

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2023-2024 கல்வியாண்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கிருஷ்ணகிரி மாணவி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற பெரியபனமுட்லு ஏ.இ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படிக்கும் மதுமிதா என்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இன்று 05.08.2024 வாழ்த்து தெரிவித்தார். இவரை நாமும் வாழ்த்தலாமே.

News August 5, 2024

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் நாளை மறு நாள் (ஆக 7)அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி சென்ட்ரல் தியேட்டர் அருகே இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கப்படும் என தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.மதியழகன் தெரிவித்துள்ளார். எனவே இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!