Krishnagiri

News June 2, 2024

கிருஷ்ணகிரியில் திமுக வாக்கு எண்ணும் முகவர்கள் கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதையொட்டி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில், முகவர்கள் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

கிருஷ்ணகிரி :மழைப்பொழிவு விவரம்!

image

கிருஷ்ணகிரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயக்கோட்டையில் 3 செ.மீட்டரும், பாம்பார் அணையில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கன அடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சத்தில் இருந்த பாரூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 1, 2024

கிருஷ்ணகிரி மல்லசந்திரம் டால்மன்கள் சிறப்பு!

image

கிரிஷ்ணகிரியில் உள்ள மல்லசந்திரம் எனும் பகுதியில் அமைந்துள்ளது மல்லசந்திரம் டோல்மென்ஸ். புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை, தொடர்ச்சியான வரலாற்றை கொண்ட இம்மாவட்டத்தில், கற்கால சின்னம் ஒன்று உள்ளது. அதிகம் அறியப்படாத பொக்கிஷமாக இருக்கும் இதில் ஆதி மனிதர்கள் இருந்ததற்கான அடையாங்களும் எச்சங்களும் கிடைக்க பெறுகின்றன. இந்த டால்மன்கள் பல சேதமடையாமல் அப்படியே காட்சியளிக்கிறது.

News June 1, 2024

கிருஷ்ணகிரி: இடி, மின்னல் தாக்கி பசு பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் அண்ணா நகர் பகுதியில் நேற்று (மே 31) மாலை 7 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, இடி, மின்னல் தாக்கி விவசாயி சின்னசாமி என்பவரின் 1 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க பசு இறந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பசு இறந்ததால் விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

News May 31, 2024

கிருஷ்ணகிரி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

ஓசூர் அருகே லாரிகள் மோதி விபத்து!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று(மே 30) மாலை சுமார் 4 மணியளவில் காய்கறிகள் ஏற்றி வந்த லாரி நிலைத்தடுமாறி அருகே சென்ற லாரியில் மோதியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில், லாரிகளின் ஓட்டுநர்கள் தலைமறைவான சம்பவம் சந்தேகம்படும்படி உள்ளதாக சம்பவ இடத்தில் ஓசூர் அட்கோ போலீசார் ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 31, 2024

மத்தூர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவா் கே.எம்.சரயு, நேற்று(30.05.24) குடிநீரில் உள்ள குளோரின் அளவு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி, குடிநீர் விநியோக பணி, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கபடும் உணவுகள் மற்றும் வருகை பதிவேடு, ஸ்மார்ட் வகுப்பறை பணி, பட்டுக்கூடுகள் விற்பனை என பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து உத்தரவிட்டார்.

News May 30, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சமூக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்கேபி குரூப்ஸ், பாஸ்கர் ஜூவல்லர்ஸ், சந்திரா ஜூவல்லர்ஸ், ராம் டீவி சென்டர், சிவா மருத்துவமனை, எம்ஜிஎம் பள்ளி, வேளாங்கண்ணி பள்ளி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!