Krishnagiri

News August 12, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பொழிவு குறித்து பதிவிடவும்.

News August 12, 2024

கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 10 வது தேசியக் கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இன்று (அகஸ்ட்-12) குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸின் வருவாய் அதிகரிக்க இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

News August 12, 2024

கிருஷ்ணகிரியில் கன மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?

News August 12, 2024

கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் பெய்த மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 3வது நாளாக பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): ஊத்தங்கரையில்- 72.60, பாம்பாறு அணை- 62, கிருஷ்ணகிரி- 58, போச்சம்பள்ளி- 19.40, பாரூர்- 15, பெனுகொண்டாபுரம்- 7.30, கேஆர்பி டேம்- 4.60, நெடுங்கல்- 4.80, ஓசூர்- 3.50, அஞ்செட்டி- 2 என மொத்தம் 251 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

News August 11, 2024

கிருஷ்ணகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் அநேக இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

கிருஷ்ணகிரி அணையில் உயரும் நீர் வரத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர். பி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,073 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.65 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

கிருஷ்ணகிரி ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை ஜாபர் – 9498170295, பருகூர் நாகலட்சுமி – 9498175515, கிருஷ்ணகிரி செந்தில் – 9444672727, ஓசூர்  நாகராஜ் – 9498178859, தேன்கனிக்கோட்டை கிரிஜா – 9498169703. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 10, 2024

கிருஷ்ணகிரி முன்னாள் இராணுவ வீரர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஆர்.பி.எப். கமான்டோ பிரிவினர் மற்றும் முன்னாள் துணை இராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பாக கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய மினி லாரியை கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு அவர்கள் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

News August 10, 2024

ஊத்தங்கரையில் பாஜக மாநில துணைத்தலைவர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரையில், பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மண்டல் தலைவர்களுடன் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இருந்த கருத்து வேறுபாடுகள் கலைந்து மகிழ்ச்சியுடன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

News August 10, 2024

கலெக்டரிடம் நிவாரண நிதியை வழங்கிய பள்ளி மாணவர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 22 ஆயிரத்து 360 க்கான காசோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் இன்று (ஆகஸ்ட்-10) வழங்கினர். உடன் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருந்தனர்.

error: Content is protected !!