India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒசூர் அடுத்த பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா “வெள்ளையனே வெளியேறு” “உப்பு சத்தியா கிரகம்” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா முன்னாள் முதல்வர் காமராஜர், கக்கன் ஆகியோரிடம் நன்கு பழகியவர். இன்று 103 வயதில் வயது மூப்புக்காரணமாக காலமானார். அவருக்கு பல தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 5,796 மாணவர்களுக்கு ரூ.123.66 கோடி கல்வி கடனாக வழங்கப்படுள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 1,520 பேருக்கு 25.19 கோடியும், 2022-2023ஆம் ஆண்டில் 1,741பேருக்கு ரூ.31.95 கோடியும், 2023-2024ஆம் ஆண்டில் 2,070 பேருக்கு ரூ.50.63 கோடியும், இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை 438 பேருக்கு ரூ.15.89 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக மருத்துவத் தொழிலை தொடர்ந்து வாழ்வையே அர்ப்பணித்து போராடி மறைந்த டாக்டர்.எம்.ஆர்.சிவசாமி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணகிரி விவசாயிகள் சங்க தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆகியோர் 25.08.2024 -க்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆளில்லா விமான அமைப்பின் (ட்ரோன்கள்) வடிவமைப்பு, இயக்கம் மற்றும் பயிற்சிக்கான நிபந்தனைகளை வெளியிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசு திட்டங்களிலோ இனிவரும் காலங்களில் டிஜிசிஏ (DGCA) அமைப்பால் சான்றிதழ் பெற்ற ட்ரோன்கள் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2 to FL11 (FL6 தவிர) என அனைத்தும் ஆக.16ஆம் தேதி காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.): நெடுங்கல் 123.20, போச்சம்பள்ளி 97, கிருஷ்ணகிரி 76.2, பாரூர் 74, கிருஷ்ணகிரி அணை 73, ஊத்தங்கரை 49, தேன்கனிக்கோட்டை 47, ஒசூர் 32.90, பாம்பாறு அணை 30, சின்னாறு அணை தலா 10, அஞ்செட்டி 3.4, சூளகிரி 3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், மலையாண்டஅள்ளி, செட்டிமாரம்பட்டிமாரி, செட்டிஅள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதையும், மழைநீரை வெளியேற்றும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டு கால்வாய்களை சீரமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சின்ன ஆலரஅள்ளி பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ரூ. 18 லட்சம் மதிப்பில் 5000க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இருந்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் பெய்த கனமழையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இவை தண்ணீரில் மூழ்கி இறந்தன. இது குறித்து பண்ணையின் உரிமையாளர் அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதன் படி விஏஓ விசாரணை நடத்தி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.