India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு சீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சீர் மரபினருக்கான வீட்டு மனை பட்டா வழங்கல், வீடு கட்ட நிதியுதவி வழங்கல் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மரபினர் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் (அ) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒசூர் அடுத்த சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ்(65), இவர் இன்று மத்திகிரி காவல்நிலையம் சென்று மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது பேரன் வேல்முருகனுடன் சென்றபோது கிராமத்திற்கு அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் முனிராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தலைமறைவாகி உள்ளனர். உடலை மீட்டு முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மத்திகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினமான இன்று கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சரயு காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார், விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அஞ்செட்டி வட்டத்திற்குட்பட்ட பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்த C.M.மரிசாமி கவுடா, “வெள்ளையனே வெளியேறு” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று சுதந்திர போராட்ட வீரராவார். வயது மூப்பு காரணமாக 103 வயதில் இன்று காலமான மரிசாமி கவுடாவின் உடலுக்கு அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அதிமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா, “வெள்ளையனே வெளியேறு” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா இன்று 103 வயதில் காலமானார். அவரது உடலுக்கு ஒசூர் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளரான பிரகாஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக் குழுக்கூட்டம் (Annual General Body Meeting) வரும் 15.08.2024 அன்று நடைபெறவுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள் ஆகிய இடங்களில் மூவர்ணக் கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி அப்புகைப்படத்தை www.harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படும் போது விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நபர்களுக்கு Good Samaritan Scheme திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும், தமிழக அரசு ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
Sorry, no posts matched your criteria.