Krishnagiri

News March 29, 2024

எல்.முருகன் மீது வழக்கு பதிவு

image

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். முன் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் எல்.முருகன் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 29, 2024

தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

image

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2024

கிருஷ்ணகிரி அருகே குவிந்த மக்கள்  

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News March 29, 2024

தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

image

கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பாக 11 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

கிருஷ்ணகிரி: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

image

ஓசூர்:கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் முருகேசன்(48). இவர் நேற்று முன்தினம் இரவு, கர்நாடகம், அத்திப்பள்ளிக்கு பைக்கில் சென்றார். அப்போது குந்துமாரனப்பள்ளி அருகே தரைமட்ட பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது சாவிற்கு காரணம், அலட்சியமான சாலை பணிதான் என உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

News March 28, 2024

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

image

கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் அடுத்த குருவிநாயனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை முதலே பல்வேறு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் காந்திமதி மகளிர் சமூக நல அலுவலர் கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்துவருகின்றார். மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இப்பகுதி ஆந்திர எல்லையோர பகுதியாகும்.

News March 28, 2024

பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆண்டியூர் முருகன் கோயிலில், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே முனுசாமி, உள்ளிட்ட பலர் வழிபாடுசெய்து பிரச்சாரத்தை துவக்கினர். பின்னர் மாரம்பட்டி கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

News March 28, 2024

கிருஷ்ணகிரி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை

image

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை தர்மபுரி வருகின்றார். தர்மபுரி திமுக வேட்பாளர் மணி மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுகிறார்.

News March 28, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக சூறாவளி வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் நேற்று (மார்ச் 27) மாலை ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட உப்பாரப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக  தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

News March 27, 2024

கிருஷ்ணகிரியில் தேர்தல் புறக்கணிப்பு

image

கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த கம்மம் பள்ளி ஊராட்சி, பழையஊர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் பழைய ஊர் கிராம வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும்  ஊரில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.