India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

கரூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<

கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சரும் திமுக கரூர் மாவட்டம் செயலாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மேற்கு நகர 47வது வார்டு பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் 30 பேர் தங்களை நேற்று (3.3.26) திமுக-வில் இணைத்து கொண்டனர். கரூர் மாவட்டம் திமுக அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.

கரூர் மண்மங்கலம் பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை 10:30 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் மாடுகளுக்கு தீவனம் தயாரித்தல், தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் குறித்தும், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஜெயபாஸ்கர் – கார்த்திகா தம்பதியினர். ஜெயபாஸ்கருக்கும், தமிழ்செல்வன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்செல்வன் நேற்று ஜெயபாஸ்கர் வீட்டிற்கு சென்று அரிவாளால் ஜெயபாஸ்கர் தலையில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த கார்த்திகாவையும் வெட்டினார். இதுகுறித்து கார்த்திகாவின் தாயார் தலைமைக் காவலர் அகிலா வெங்கமேடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கரூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி முகாம் ஏப்ரல் 28 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 9,450 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான இத்தடுப்பூசியை சிறுமிகள் செலுத்தி கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.3) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.3) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.