India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வரை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கரூர் VNC மஹாலில் பாஜக கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு ஆலோசனை வழங்கினார். உடன் தேர்தல் பொறுப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், காவல் துறையில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் ஒன்று அளித்தார். அதன் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், போலி ஆவண மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு அனைத்திற்கும், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் ஜூலை 1 முதல் 10ஆம்தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தங்கவேல் நேற்று அறிவித்துள்ளார்.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.
கரூர் மாவட்டம் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வேண்டி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது மனுவை நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.