India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட எஸ்பி பிரபாகர் உள்ளிட்ட வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் ,குளித்தலை நீதிமன்றங்களில் ஜூன், 8ல் நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, இதர குடும்ப நல வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.எனவே வக்கீல்கள்,பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முன்வந்து தீர்வு காணலாம்.
கரூர் கூடைப்பந்து குழு சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 64- ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி மற்றும் கேவிபி சுழற்கோப்பைக்கான 10-ஆம் ஆண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தொடக்கிவைத்தனர் . முன்னதாக கூடைப்பந்து குழு தலைவர் வி.என்.சி.பாஸ்கர், செயலர் முகமது கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2023ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மே.30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் https://awards.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7401703493 என்ற மாவட்ட விளையாட்டு அரங்க எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் மின்னாம்பள்ளி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகேசன் ( 47) இவர் 19ஆம் தேதி சர்ச் கார்னர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் முருகேசனின் செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போனை திருடிய வெங்கமேட்டை சேர்ந்த ஜீவானந்தம்(21), விக்னேஸ்வரன் (21) இருவரை கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் நகர்பகுதியில் 13 செ.மீட்டரும், பஞ்சம்பட்டி பகுதியில் 10 செ.மீட்டரும், குளித்தலை, கடவூர் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் மாயனூரில் 5 செ.மீட்டரும் மயிலம்பட்டியில் 3செ.மீட்டரும் அரவக்குறிச்சி, தோகைமலை ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
வெள்ளியணை, உப்பிடமங்கலம், ஜெகதாபி பகுதிகளில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால், காலை மதியம் மாலை ஆகிய மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடியும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மழைநீர் வடியும் வரை வெள்ளியணை லட்சுமி மண்டபம், உப்பிடமங்கலம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் உணவு வழங்கப்படுவதை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பார்வையிட்டார்.
அரவக்குறிச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.