Karur

News December 25, 2024

கரூர்: லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது

image

குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய பாலம், பேருந்து நிலையம், உழவர் சந்தை, நாப்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற செல்வம் (52), ரமேஷ் (50), முகமது இஸ்மாயில் (43), முகமது ரபி (56), ஷாஜகான் (44), செந்தில்குமார் (50), சந்தோஷ் குமார் (33) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

News December 25, 2024

பயணிகள் ரயிலை பொங்கலுக்கு திருச்சி வரை இயக்க கோரிக்கை

image

சேலத்தில் இருந்து கரூருக்கு ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக பயணிகள் ரயில் கடந்த 2013 முதல் தினமும் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்ல வசதியாக பொங்கல் திருவிழாவையொட்டி இந்தப் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 25, 2024

கரூர்: தந்தையுடன் சென்ற சிறுமி உயிரிழந்த சோகம்

image

சோமூர் முத்தமிழ்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் தனது மகள் 6ம் வகுப்பு படிக்கும் ரித்திகாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மொசக்கன்னி முடக்கு வழியே சென்றபோது திடீரென ஆடுகள் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் தவறி விழுந்ததில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கண்ணதாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 25, 2024

திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்

image

திருச்சி – கரூர் இடையே 01.01.2025 முதல் 31.03.2025 வரை மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் (ஞாயிறு தவிர்த்து) புதிய முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதனால் தினந்தோறும் கரூர் – திருச்சி பயணம் செல்லும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 24, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.காற்றாலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
3.அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் – கரூர் எம்பி பேட்டி
4.உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து
5.கரூரில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

News December 24, 2024

உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து

image

கரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் பயில்பவர் குரு பிரசாத். இவர் பொன்னர் சங்கர் வாழ்வியலை 18 மணி நேரம் இடைவெளியின்றி தனி நபராக நடித்துக் காட்டி உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு உலக சாதனை நிகழ்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், துணைப்பொதுச் செயலாளர் நடராஜ் ஆகியோரிடம் மாணவர் குரு பிரசாத் வாழ்த்து பெற்றார்.

News December 24, 2024

கரூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

image

புகழூரில் மாவட்ட அளவில் மாணவ- மாணவிகளுக்கான கராத்தே போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜனவரி 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களை கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷிசரவணன், செயலாளர் ரெசின் செந்தில்குமார் நேற்று பாராட்டினர்.

News December 24, 2024

கரூரில் வங்கி ஊழியரிடம் செயின் பறிக்க முயற்சி

image

கரூர் அருகே காக்காவாடி பகுதியை சேர்ந்த சிவசாமி, இவரது மனைவி ரேவதி (40) சுக்காலியூர் தனியார் வங்கியில் கிளர்க்காக பணி செய்து வருகிறார். பணி முடிந்து காக்காவாடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கடவூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட ரேவதி சத்தம் போட்டதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2024

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

தோகைமலை வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட கல்லடையை சேர்ந்த சந்தானகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து நீதிமன்ற தீர்ப்புரையின்படி நேற்று கிராமம் புல எண்கள் 438, 439 என வகைப்படுத்தி நில அளவை செய்து அத்து காண்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் தாசில்தார் இந்துமதி தலைமையில் வருவாய் துறையினர் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.தனியார் பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து
2.காய்ந்து போன கரும்புடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு
3.மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெற்ற 512 மனுக்கள்
4.நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
5.அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா

error: Content is protected !!