Karur

News December 31, 2024

கரூரில் மானிய விலையில் பம்ப் செட் மோட்டார்

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller / Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக 9443156424, 9443567583, 9443922630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 31, 2024

தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு

image

கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News December 31, 2024

கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

image

கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News December 31, 2024

கரூரில் கடும் நடவடிக்கை: எஸ்பி உத்தரவு

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K பெரோஸ் கான் அப்துல்லா, புத்தாண்டு நாளன்று இரவில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News December 30, 2024

கரூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ தவெகவில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் இணைவு ➤ க.பரமத்தி அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ➤ கரூரில் அதிமுகவினர் 300 பேர் கூண்டோடு கைது ➤ கரூரில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு ➤ வேலம்பாடியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ➤ சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது ➤ பஞ்சபட்டி பகுதியில் மிதமான மழை ➤ மருதூர் பேரூராட்சியில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

News December 30, 2024

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

image

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று (30.12.2024) மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) திரு.கருணாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 30, 2024

கரூர் மாவட்டம் வழியாக சிறப்பு ரயில்

image

கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், டிசம்பர் 30, ஜனவரி 6, 13 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3:20க்கு கன்னியாகுமரியை அடையும். சேலம், கரூர், நெல்லை வழியே இயக்கப்படும். மறுமார்க்க ரயில், வரும், 31, பிப்ரவரி 7, 14 ஆகிய நாட்கள் இரவு 7:10க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:35 மணிக்கு ஹூப்பள்ளியை அடைகின்றது.

News December 30, 2024

கரூர் மாவட்டம் வழியாக சிறப்பு ரயில்

image

கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், டிசம்பர் 30, ஜனவரி 6, 13 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3:20க்கு கன்னியாகுமரியை அடையும். சேலம், கரூர், நெல்லை வழியே இயக்கப்படும். மறுமார்க்க ரயில், வரும், 31, பிப்ரவரி 7, 14 ஆகிய நாட்கள் இரவு 7:10க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:35 மணிக்கு ஹூப்பள்ளியை அடைகின்றது.

News December 30, 2024

ஆவின்பால் முகவர்: விண்ணப்பம் வரவேற்பு

image

கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் உபபொருட்கள் விநியோகம் செய்ய முகவராக கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம், புகழூர், அரவக்குறிச்சி, தோகைமலை, பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சொந்த, வாடகை, கட்டிட இட வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 9585975281 எண்ணில் விபரம் தெரிந்து கொள்ளலாம்.

News December 30, 2024

கரூரில் அதிமுகவினர் 300 பேர் கூண்டோடு கைது

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனுமதியை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்றது. அப்போது, 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

error: Content is protected !!