India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (04.01.2025) காலை 07.35 மணி அளவில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டிமாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்சைக்கிள் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்கள். விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை.புதூர் பகுதியில் யானைத்தந்தம் கடத்தி வந்த ஐந்து பேர் கரூர், திருச்சி மற்றும் மதுரை வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் 1.840 கிலோ கிராம் எடையுள்ள உடைந்த ஒரு யானைத் தந்தம் பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள், நாகராஜ், ராஜா, நடராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரை இன்று கைது செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்ததினம் இன்று அஞ்சாத துணிவும், அடங்காத நெஞ்சுரமும் கொண்டு ஆங்கிலேயரை வென்று நல்லறத்துடன் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த அவரின் வீரத்தையும் தீரத்தையும் போற்றி வணங்குவோம் என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்தி வி.செந்தில்பாலாஜி வாழ்த்து கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 2024 ஆண்டில் மொத்தம் 9,391 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 138 மி.மீ பெய்துள்ளது. கரூரில் 893 மி.மீ, அரவக்குறிச்சியில் 753.60 மி.மீ, அணைப்பாளையத்தில் 881.40 மி.மீ, க.பரமத்தியில் 958 மி.மீ, குளித்தலை 701 மி.மீ, தோகைமலையில் 729.40 மி.மீ, மாயனூரில் 966 மி.மீ, கடவூரில் 496 மி.மீ, பாலவிடுதியில் 577 மி.மீ, மைலம்பட்டியில் 432 மி.மீ, பஞ்சப்பட்டியில் 1,079 மி.மீ என பெய்துள்ளது.

கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை போற்றுவோம் என்று புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். மேலும் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என் புகழ் வணக்கம் என்று கூறினார்.

கரூர் திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி ‘விதியென்ன ஆனாலும் வரியொன்றும் தர மாட்டேன் என்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழக்கமிட்ட சிங்கக் குரலோன் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணின் பெருமைக்காகவும் தன்னுயிரை ஈந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு வீரத்தை எந்நாளும் போற்றி வணங்குவோம்’ என புகழாரம் சூட்டினார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பால் வற்றும் காலங்களில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்விதமாக லிட்டருக்கு 75 பைசா பால் உற்பத்தியாளர்களுக்கு ஜன., பிப். மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.3) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.45, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.60, இஞ்சி ரூ.60, சுரைக்காய் ரூ.35, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.120, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.60, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.50, புதினா ரூ.40, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.70க்கு விற்பனை ஆகிறது.

கரூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்றுமுதல் இன்றுமுதல் ஜன.8ம் தேதிவரை வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்படுகிறது. மேலும் ஜன.9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவிற்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் கரூர் விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் S.S.லக்ஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட அணியில் லக்ஷித் தேர்வு செய்யப்பட்டிருப்பது, கரூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கிரிக்கெட் பயணம் வெற்றி பெற பள்ளியின் சார்பிலும், கரூர் மக்கள் சார்பிலும் வாழ்த்து குவிகிறது.
Sorry, no posts matched your criteria.