Karur

News January 5, 2025

கரூர் மக்களே பொங்கல் தொகுப்பில் குறையா? உடனே இத செய்யுங்க

image

கரூரில் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800- 425-5901 ஆகிய வட்ட அளவிலும், கரூரில் 9445000266 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 5, 2025

ரூ. 3.75 கோடி மதிப்பில் பாலப் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

image

கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதி அரசு காலனி – பஞ்சமாதேவி – நெரூர் சாலையில் ரூ. 3.75 கோடி மதிப்பில் 4.00 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையை இருவழி தடமாக அகலப்படுத்தி, ஏற்கனவே இருக்கும் குழாய் பாலத்தை பெட்டி பாலமாக மாற்றும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News January 5, 2025

கரூர்: அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய நான்கு பேர் மீது வழக்கு

image

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சியுடன் ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சி, ஏமூர் ஊராட்சிகளை இணைத்து அரசு உத்தரவிட்டது. இதைக் கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் போஸ்டர் அச்சிடப்பட்டது. அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியதாக போஸ்டர் ஒட்டிய கூலித் தொழிலாளர்கள் நவீன் குமார், குகன்,மோகன்ராஜ், மாயவன் ஆகிய நான்கு பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 4, 2025

கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்யலாம். தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால்மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு WWW.TAHDCO.COM. இணையத்தை பார்க்கவும்

News January 4, 2025

அமலாக்கத்துறை சோதனை: கரூர் எம்பி பேட்டி

image

அமலாக்கத்துறைக்கு எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களை தவிர, வேறு திசைகள் தெரிவதில்லை எனவும், பாஜக, RSS-ஐ எதிர்க்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை டென்ட் போட்டு தங்கிவிடுகிறது எனவும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்டத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று ( 04/01/2025) தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

ஆதரவற்ற பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க முடிவு

image

விதவை, ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்திற்காக மானியத்தில் கோழிக்குஞ்சுகள் வழங்க கால்நடை பராமரிப்பு துறை முன்வந்துள்ளது. நான்கு வார வயது உடைய 40 அசில் இனக் கோழிக்குஞ்சுகளை 50 % சதவீத மானியத்தில் வழங்குகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அந்தந்த கால்நடைத் துறையை அணுகி கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

News January 4, 2025

கரூரில் EB ஆபிஸ் இடமாற்றம் செஞ்சுருக்காங்க

image

கரூர் மேற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து SE சிவக்குமார் கூறியிருப்பதாவது: கரூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் காத்தலும் இயக்கலும், இளமின் பொறியாளர் அலுவலகம் நேற்று முதல் கரூர் ராமானுஜம் நகர் தெற்கு, கதவு எண் 244 என்ற வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை சாலை,காந்திபுரம், வையாபுரி நகர், பாரதி நகர், ராமானுஜம் நகர்,LGB நகர் பகுதிக்கான மின்கட்டணம் செலுத்தலாம்.

News January 4, 2025

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்

image

இன்று கரூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்காண விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மற்றும் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News January 4, 2025

கிரிக்கெட் அணிக்கு கரூர் மாணவர் தேர்வு

image

கரூர் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் எஸ்.இலக்ஷித். இவர் மாவட்ட, மாநில அளவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் கரூர் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார். இதில் நிர்வாகக் குழு தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் முதல்வர் முனைவர் கார்த்திகா லட்சுமி ஆகியோர் நேற்று பாராட்டினார்கள்.

News January 3, 2025

கரூர் எம்.பி., நாளை நன்றி தெரிவிக்கும் பகுதிகள்

image

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி எம்.பி. இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும்நன்றி தெரிவிக்கும் விதமாய் கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி. வார்டு 11-48 கோடங்கிபட்டி முதல் ராமானுஜர் நகர் வரை நாளை அவர் நன்றி தெரிவிக்கிறார்.

error: Content is protected !!