India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக ராஜகோபால் உள்ளார். இவர் பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஸ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.17500 லஞ்சமாக வாங்கி உள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் அவருக்கு உதவிய அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சீத்தப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகள் தாரணி. இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். இவரது மாஸ்டர் தனசேகரன் தலைமையில் 21 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், மெடல்களை பெற்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 265.20 மில்லி மீட்டர் மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதில், அதிகபட்ச மழை பொழிவாக பஞ்சபட்டியில் 89.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 57.60 மில்லி மீட்டர், கரூரில் 28.60 மில்லி மீட்டர், கடவூரில் 22.00 மில்லி மீட்டர், அனைப்பாளையத்தில் 19.40 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 17.60 மில்லி மீட்டர், மாயனூரில் 14.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 1330 திருக்குறள் ஒப்பிவிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம், அல்லது (https://tamilvalarchithurai.tn.gov.in) என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூரில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், Tamil Warriors Martial Arts & Sports Association சார்பில், கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
கரூர்: தளவாபாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). விவசாய கூலித்தொழிலாளியான இவர் சாலையோரம் நடந்து சென்றபோது, பிரகாஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் வெங்கமேடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் 77 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களை காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து, இனி எந்தக் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
கரூர் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் ஒரு பயனாளிக்கு 40 குஞ்சுகள் அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசிநாள் ஆகஸ்ட் 23 என மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.
➤கரூர் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்
➤கரூரில் நாளை மழைக்கு வாய்ப்பு
➤கரூரில் விளம்பர பேனர் விழுந்து தம்பதியினர் படுகாயம் வீடியோ
➤ஜவகர்கடை வீதி செல்போன் கடையில் தீ விபத்து
➤கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆட்சியர் அழைப்பு
➤கரூரில் ஆகஸ்ட் 16 வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.