Karur

News January 25, 2026

கரூரில் நாளை செயல்படாது!

image

கரூர் மாவட்டத்தில் நாளை (ஜன. 26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சந்தையில் மதுபானத்தைப் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 25, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள அறிவிப்பில், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் கனவுகளைப் பகிர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi எனத் தட்டச்சு செய்தோ அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ விவரங்களைப் பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 09.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2026

கரூரில் தட்டி துக்கிய EX அமைச்சர்!

image

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தளவாபாளையம் எம்.ஆர்.பி. மூர்த்தி, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக பிரமுகரின் இந்த அதிரடி மாற்றம் கரூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 24, 2026

கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கரூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

கரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

கரூர் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

image

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருகே கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் மாற்றுத்திறனாளி மஞ்சள் காமாலை நோயினால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மனம் விரக்தியில் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரி மேற்கொண்டனர்.

News January 24, 2026

கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 24, 2026

கரூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> Sanchar Saathi <<>>என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

கரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

கரூர் மக்களே, பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
4). ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
5). கரூர் மாவட்ட அறிவுப்புகள் குறித்த விவரங்களுக்கு – https://karur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கரூரில் மின்தடை அறிவிப்பு!

image

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (ஜன.27) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி, பணிக்கம்பட்டி, எரமநாயக்கன்பட்டி, வளையப்பட்டி, வலையபட்டி, மருதூர், மேட்டுப்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!