India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கரூரில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (ஜூன்.21) வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தங்களுடைய கயவிவரகுறிப்பு உரியகல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த கவரப்பட்டியைச் சோ்ந்த சிவமணி மகன் லோகேஷ்கண்ணன்(16). இவா் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை லோகேஷ்கண்ணன் கைப்பேசியில் நீண்ட நேரம் பெற்றோா் கண்டித்துள்ளனா்.இதனால் விரக்தியடைந்த லோகேஷ்கண்ணன் சனிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்தனர்.
கரூர், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை – குளித்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனால், நாளை 17.06.2024 ரயில் எண்.16812 சேலம்- மயிலாடுதுறை ரயில் 17.06.2024 கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
வாங்கல் குப்புச்சிபாளையம் காட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டித் தாக்கியதாகவும், அவருடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கியது தொடர்பாகவும் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் பிணை கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன் பிணை வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பாக, சமூக பங்களிப்பு நிதியில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.1.31கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கரூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்கவும் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்கவும், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், தனக்கும் தனது சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டுமென கரூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசியமங்கலம் 3 ரோடு அருகே குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலை பொருட்கள் கொண்டுவந்தது தெரியவந்தது. அதனையடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நரியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.