Karur

News June 24, 2024

57 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்

image

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர். இன்றைய கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்பத்தை கோருதல் ,மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 657 மனுக்கள் பெற்றனர்.

News June 24, 2024

கரூரில் நடைபெறாத அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூன்.24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி புகாரில் முன் ஜாமீன் கோரிய தீர்ப்பு நாளை வருவதாலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாலும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது.

News June 24, 2024

கரூர் அருகே பேருந்து மீது லாரி மோதல்

image

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இன்று அதிகாலை பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்து முன் பக்கம் நின்று பழுது பார்த்துக் கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

கரூரில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

image

கரூர் பகுதிகளுக்காக ரூ.800 கோடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூன்.22) சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், கரூர் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களின் 64 குடியிருப்புகளுக்கும் இந்த குடிநீர் திட்டத்தால் மொத்தம் 4.85 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார்.

News June 22, 2024

பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கை

image

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் கோவை சாலை, வெங்கடேஷ்வரா சாலையில் இருந்த, 29 கடைகள் இடிக்கப்பட்டன. தற்போது, அதே இடத்தில் கடைகளை கட்டி, பழைய உரிமம் தாரர்களுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 29 கடைகளின் பழைய உரிமம்தாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை வாடகை குறித்த விபரங்களை பிளக்ஸ் பேனரில் கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வைத்து மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News June 21, 2024

கரூர்: முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகள், திரு நம்பிகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக நடைபெற்றது. இதில், 36 திருநங்கைகள் வீட்டுமனை பட்டா மற்றும் சுய தொழிலுக்கான கடன் உதவி, வீடுகளே பராமரிக்க உதவி ஆகியவை வழங்கினார்.

News June 21, 2024

இந்திய விமானப்படையில் ஆள்கள் சோ்ப்பு: ஜூலை 28 கடைசி நாள்

image

இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அறிந்து கொள்ளலாம் என கரூா் ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

News June 20, 2024

இந்திய விமானப்படையில் ஆள்கள் சோ்ப்பு: ஜூலை 28 கடைசி நாள்

image

இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அறிந்து கொள்ளலாம் என கரூா் ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

News June 19, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்-ஆட்சியர் ஆய்வு

image

கடவூர் வட்டம் வரவனை கிராம அலுவலர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று (ஜூன்.19) நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது மக்களின் தேவையை சேவைகளாக உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் மூலம் பொது சேவையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

error: Content is protected !!