Kanyakumari

News January 6, 2025

குமரியில் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்

image

ஜனவரி 12-ம் தேதி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சுய சார்பு வாழ்க்கை குறித்தான டிஜிட்டல் கண்காட்சி நடைபெறுகிறது. இயற்கை சூழலை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைக்கிறார். விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். பலர் கலந்து கொள்கின்றனர்.

News January 6, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.5) காலை 10 மணிக்கு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்யவுள்ளனர். #மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News January 6, 2025

வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை

image

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்அக்கா குட்கா,புகையிலைப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள் தடைச் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்க கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்

News January 6, 2025

குமரி மாவட்டத்தில் 2 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட உதவி கலால் ஆணையர் லோரேட் டா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் டிஆர்ஓ பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் வெளி மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 5, 2025

குமரி எஸ்.பி நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு

image

நாளை காலை சரியாக 10.00 மணிக்கு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

மேல்மருவத்தூர் ஆன்மீக சுற்றுலா TNSTC ஏற்பாடு

image

நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலா செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்த பேருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்கள் வழியாக மேல்மருவத்தூர் செல்லும்.

News January 5, 2025

1201 உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிகிறது!

image

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் 1201 பதவியிடங்கள் உள்ளன. இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி இந்த 1201 உள்ளாட்சி பணியிடங்கள் காலியாகின்றன. மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 95 ஊராட்சி தலைவர்கள் அதன் உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகள் இன்றுடன் முடிவடைகின்றன.

News January 5, 2025

குமரி மாவட்ட எஸ்.பி-யின் whatsapp எண் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க 8122223319 (whatsapp) எண் மூலமாக காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று(ஜன.5) தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

News January 5, 2025

குமரி: 2024-ல் ரேசன் பொருட்கள் கடத்திய 322 பேர் கைது

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கடத்தியதாக 281 வழக்குகள் பதிவாகியுள்ளன. ரேசன் பொருட்கள் கடத்தியதாக 332 பேர் கைதாகியுள்ளனர். 151 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு கடத்தல் பிரிவு போலீசார் நேற்று கூறியுள்ளார்.

News January 5, 2025

பெற்றோர் கடனை அடைக்க திருடனாக மாறிய சிறுவன் கைது!

image

தக்கலை அருகே நேற்று(ஜன.4) சாலையோரம் நின்ற பெண்ணிடம், பைக்கில் வந்த நபர் செயினை பறிக்க முயலவே, அந்த பெண் நகையை பிடித்துக் கொண்டார். இது குறித்த புகாரில் தக்கலை போலீசார் சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் நகை பறிப்பில் ஈடுபட்டது சிறுவன் என தெரிந்தது. அவரை பிடித்து விசாரிக்கையில், கடனில் தவித்த பெற்றோருக்கு உதவவே வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!