India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 10,11 ,12 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 6ஆம் தேதி சிறு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணையும் பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு காலை 9:30 – 10:30 மணி வரை நடைபெறும் என குமரி முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரியில் நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு முதல் அமைச்சரின் ‘நீர்நிலைப் பாதுகாவலர்” விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ளோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜனவரி 17.
பிரதமரின் ஆலோசகர் அமித் காரே மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (ஜன.03) மாலை 5 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகை தர இருக்கின்றனர்.கன்னியாகுமரி வனத்துறை விடுதியில் தங்கியிருந்து சுற்றுலா மையங்களை பார்வையிட்டு பின்னர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு கேரளா செல்கின்றனர். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குமரியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசால் பொங்கல் பரிசாக பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு கரும்பு ஆகியன வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5.77 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக இன்று (ஜன.03) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் குமரி மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு குமரி கிழக்கு, குமரி மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் மேற்கு மாவட்டத்தில் கிளியூர் பத்மநாபபுரம் விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (ஜன. 4) மார்கழி பெரும் திருவிழா நடைபெற உள்ளது. ஜன-4 திருக்கொடியேற்றம், ஜன-6 இரவு மக்கள்மார் சந்திப்பு மற்றும் மக்கள்மார் சுற்று, ஜன-8 பஞ்ச மூர்த்தி தரிசனம், ஜன-10 கைலாச பர்வத தரிசனம், ஜன-12 திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல், சப்த வர்ண காட்சி, ஜன-13 ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜன.2) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினைக்குமார் மீனா, உதவி ஆட்சியர் சுஷ்ஸ்ரீ குந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு குமரி சுற்றுலாதளத்தினை உலகதரத்திற்கு உயர்த்தும் வகையில் குமரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் காலை சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டுகளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நாளை (3ம் தேதி ) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் அன்று கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சமீபத்தில் வருகை தந்த கவிஞர் வைரமுத்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் வீட்டை சென்று பார்வையிட்டு அது சிதலமடைந்து இருப்பதை கண்டு அவரது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.1941இல் கட்டப்பட்ட ‘மதுரபவனம்’ மாளிகை ஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டை சீரமைக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
Sorry, no posts matched your criteria.