India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலா செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்த பேருந்து முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்கள் வழியாக மேல்மருவத்தூர் செல்லும்.
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் 1201 பதவியிடங்கள் உள்ளன. இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி இந்த 1201 உள்ளாட்சி பணியிடங்கள் காலியாகின்றன. மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 95 ஊராட்சி தலைவர்கள் அதன் உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகள் இன்றுடன் முடிவடைகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க 8122223319 (whatsapp) எண் மூலமாக காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று(ஜன.5) தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கடத்தியதாக 281 வழக்குகள் பதிவாகியுள்ளன. ரேசன் பொருட்கள் கடத்தியதாக 332 பேர் கைதாகியுள்ளனர். 151 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு கடத்தல் பிரிவு போலீசார் நேற்று கூறியுள்ளார்.
தக்கலை அருகே நேற்று(ஜன.4) சாலையோரம் நின்ற பெண்ணிடம், பைக்கில் வந்த நபர் செயினை பறிக்க முயலவே, அந்த பெண் நகையை பிடித்துக் கொண்டார். இது குறித்த புகாரில் தக்கலை போலீசார் சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் நகை பறிப்பில் ஈடுபட்டது சிறுவன் என தெரிந்தது. அவரை பிடித்து விசாரிக்கையில், கடனில் தவித்த பெற்றோருக்கு உதவவே வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா இ.ஆ.ப., நேற்று(ஜனவரி 4) திருவள்ளுவர் சிலையிலிருந்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கான கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மாணவ மாணவியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
#இன்று(ஜன.5) காலை 6 மணிக்கு, அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து மாணவ மாணவிகளின் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி நாகர்கோவிலில் பொங்கல் சீர்வரிசை நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.#பகல் 1 மணிக்கு இமாச்சலப் பிரதேச சட்டமன்ற மதிப்பீட்டு குழு கன்னியாகுமரி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி நாளை (05.01.2025) காலை 7.00 மணிக்கு வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்திலிருந்து அண்ணா மாரத்தான் போட்டியினை துவக்கி வைக்கிறார். மாணவ மாணவிகளுக்கு தனி தனியாக நான்கு பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறுகிறது.
குமரி அருகே அஞ்சு கூட்டு விளையைச் சேர்ந்தவர் வேலு. இவர் மனைவியை பிரபல ரவுடி சுஜித் என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை வேலு தட்டி கேட்டாராம். இதைத் தொடர்ந்து சுஜித் கருங்கல்லை எடுத்து வேலுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் இன்று சுஜித்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஜித் பிரபல ரவுடி லிங்கத்தின் மகன் ஆவார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(ஜன.4) செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “குமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இம்மாதம் 9ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது; இதற்காக வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது; மொத்தம், 5,77,849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.