India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினமான 26 ஆம் தேதி 95 கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 முதல் 10 வரை அறிவியல் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. நாகர்கோவில் இந்து கல்லூரியில் வைத்து இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமினை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலத்தண்டாயுதபாணி தொடங்கி வைக்கிறார்.
கேளர மாநிலம் பாறசாலை மூரியங்கரையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ்(23). குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா(22). ஷாரோன் குமரியில் படித்து வந்தபோது, கிரீஷ்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளது. பின்னர் பெற்றோர் எதிர்க்கவே, காதலனை பிரிய நினைத்த கிரீஷ்மா ஷோரோனை வீட்டிற்கு அழைத்து அவருக்கு தெரியாமல் விஷம் கொடுத்ததில், 11 நாள் சிகிச்சையில் இருந்து அவதிக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கன்னியாகுமரியில் வசித்து வந்த கிரீஷ்மா என்ற பெண்ணுக்கு(24) தூக்கு தண்டனை விதித்து திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் இன்று(ஜன.20) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கிரீஷ்மாவின் மாமன் நிர்மல்குமார் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட பொலிரோ கார் ஒன்று, நாகர்கோவில் செல்வதற்காக இன்று(ஜன.20) அதிகாலை வந்து கொண்டிருந்தது. களியங்காடு அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், ஜோதி நகர் ராஜா தெருவை சேர்ந்த அகில்(24) காரில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
#இன்று(ஜன.20) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தொழிற்சாலை அலுவலகம் முன்பு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 48வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம்.#காலை 11 மணிக்கு சிவசேனா சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.#மாலை 5 மணிக்கு கண்ணனாகம் சந்திப்பில் அதிமுக கூட்டம் நடைபெறுகிறது.
பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இன்று(ஜன.20) திறக்கின்றன. அதன்படி, குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு இன்று தொடங்கி நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில், புதிதாக உருவாகி இருக்கும் 2025 – 2027 பருவத்திற்கான மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு, நேற்று(ஜன.19) கே.டி.சுரேஷ் என்பவர் பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கிழக்கு மாவட்ட தலைவராக கோபகுமார் என்பவரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் உடப்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக R.T சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவராக கே.கோபகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்இன்று (ஜன.20) பொறுப்பேற்றுக் கொண்டனர். 2025 முதல் 2027 வரை இவர்கள் இந்த பதவியில் நீடிப்பார்கள். புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று(ஜன.19) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முதலே தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிகையாக இருப்பது நல்லது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.