India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டமேலவை முன்னாள் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், குமரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் தூணாய் இருந்தவருமான சங்கரலிங்கம் நினைவுநாள் இன்று(ஜன.15). அன்னாரது நினைவு நாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் இருந்து தெற்கு கடலுக்குள் 5 நாட்டிக்கல் தூரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது கரையிலிருந்து 25 முதல் 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் வருகிற சனிக்கிழமை(ஜன.18) வரை மீன்பிடிக்க செல்லாமல் தவிர்ப்பது நல்லது என்று கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று(ஜன.14) தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு கொச்சின் விமானப்படை முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர், மெடிக்கல் அசிஸ்டன்ட், மருந்தாளுநர் போன்ற பணிகளுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது; ஊர் மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியை ஏற்படுத்துவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரக பகுதி மக்களுக்கு மிக முக்கிய இணைப்பாக ஊரக சாலைகள் செயல்படுகின்றன. குமரி மாவட்டத்தில் ரூ 6.11 கோடியில் 9 சாலைகள் 12.93 கி.மீ. தூரம் போடப்படுகிறது. இந்த பணி விரைவில் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த இனிய பொங்கல் திருநாளில் அரும் சுவை பொங்கலைப் போல் வளம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வாழ்வில் பொங்கி நிறைந்திட எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு ஜன.15,16 தேதிகளில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் ஜன.16,17 தேதிகளில் ஆதிபராசக்தி கோவிலிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவிலில் ஒரு பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று(ஜன.13 )குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
68வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரிந்தியா கலந்து கொண்ட தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. தொடர்ந்து இன்று(ஜன.13) ரிந்தியாவிற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் அனைவரின் மூலம் பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி(கி) மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று(ஜன.13) பொங்கல் திருவிழா, அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சாஹ் நாளை (14-ந்தேதி) கன்னியாகுமரி வருகிறார். பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 5.45 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்.
Sorry, no posts matched your criteria.