Kanyakumari

News January 27, 2025

குமரி கோவில்களில் இன்று தேய்பிறை பிரதோஷம்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(ஜன.27) தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கருப்புக்கோட்டை கைலாசத்து மகாதேவா் கோயிலில், கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவில், களியங்காடு சிவன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், போட்டியோடு ஷம்பு மகாதேவர் கோவில் உட்பட பல கோவில்களில் பிரதோஷ நிகழ்வு நடைபெற உள்ளது.

News January 27, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.27) காலை 10 மணிக்கு சங்க அங்கீகார தேர்தலை நடத்தகோரி கோணம் உட்பட 6 இடங்களில் சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்.#காலை 10 மணிக்கு ஓய்வூதியம், குடியிருப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாகுமரி ரவுண்டானா அருகில் வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#காலை 11 மணிக்கு குளச்சல் நகராட்சி அலுவலகம் முன் CPIML லிபரேஷன் ஆர்ப்பாட்டம்.

News January 26, 2025

குமரியில் 10 நாட்களில் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு 

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஜன.26) கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை தடுக்க போலீசாருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றார்.

News January 26, 2025

குமரி மாணவன் சாதனை

image

குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான RoboFest-Gujarat 4.0 சாம்பியன்ஷிப்பில் அளவில் நான்காம் இடம் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், மேலும் அவர் பிறந்து வளர்ந்த ஊரான தோவாளை மண்ணிற்கு பெருமை சேர்ந்திருக்கும் பச்சை ஐயப்பன் என்பவரின் மகன் செல்வனுக்கு  பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

News January 26, 2025

கன்னியாகுமரி எம்.பி குடியரசு தின வாழ்த்து

image

மக்களாட்சியை போற்றுவோம்..
குடியரசை கொண்டாடுவோம்..
அரசியல் அமைப்பை பாதுகாப்போம்..
அனைவருக்கும் இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகள் குறிப்பிட்டுள்ளார்.

News January 26, 2025

குமரி அணைகளுக்கு இன்றைய நீர் வரத்து விபரம்

image

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 597  கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 151  கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 683, பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 374 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 234 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News January 26, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.26) காலை 9 மணிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சாசனமாக ஏற்றுக்கொண்ட நாளை நினைவு கூறும் வகையில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக மாலை அணிவித்து மரியாதை செய்கிறது.#மாலை 4 மணிக்கு காந்தி, அம்பேத்கரை போற்றும் வகையில் காங்., சார்பில் முன் சிறை சந்திப்பில் பாதயாத்திரை.#மாலை 5 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

News January 26, 2025

மக்கள் எதிர்ப்பை மீறி டவர்! எம்எல்ஏ தாரகை ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட விளாத்துறை பகுதியில் மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஏர்டெல் நிறுவனம் டவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று(ஜனவரி 25) சம்பந்தப்பட்ட பகுதிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.

News January 26, 2025

கவுன்சிலிங் முறையில் டிரான்ஸ்பர்! 417 போலீசார் பங்கேற்பு

image

குமரி மாவட்டத்தில் போலீசாருக்கு வெளிப்படையான மாறுதலுக்கான கவுன்சிலிங் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பணி மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் என மொத்தம் 417 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கான பணி மாறுதல் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என் கூறப்படுகிறது.

News January 26, 2025

கோழிக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போட இலக்கு

image

குமரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் பிப்ரவரி மாதம் கோழி கழிச்சல் நோய் இருவார தடுப்பு ஊசி முகாம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் டோஸ் கோழி கழிச்சல் நோய்க்கு போடுவதற்கு விளக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் இந்த தடுப்பூசியை கோழிகளுக்கு போட்டுபயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளார்

error: Content is protected !!