Kanyakumari

News January 29, 2025

திருவட்டாறு பிரபல பாடகரின் மனைவி காலமானார்

image

திருவட்டாறு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், பிரபல மலையாள, தமிழ் திரைப்பட பாடகருமான மறைந்த கமுகற புருஷோத்தமனின் மனைவி ரமணி புருஷோத்தமன் திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து திருவனந்தபுரம் பேரூர்கடை ஸ்வாதி நகர் வீட்டில் இன்று(ஜன.29) மதியம் 11.30 மணி வரை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு திருவட்டாறு கமுகற வீட்டில் இறுதி சடங்கு நடக்கிறது.

News January 28, 2025

கன்னியாகுமரி: இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை 

image

வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் சிடி கடைகளில் சோதனை நடத்தாமல் இருக்க கண்ணனிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். அவரும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்ஸ்பெக்டருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை இன்று விதித்தார்

News January 28, 2025

நெல்லுக்கு ஈரப்பதம் 20% என நிர்ணயிக்க கோரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அரசு 17% சதவீத ஈரப்பதம் என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை 20% நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 28, 2025

போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ் பி 

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்களான புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவைகளை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா புகையிலை பொருட்கள் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

News January 28, 2025

1 மணி நேரத்தில் 1330 குறளை ஒப்பித்த மாணவனுக்கு பரிசு.

image

நாகர்கோவில் அருகே தெற்குசூரங்குடி வைகுண்டர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு விழா நேற்று(ஜன.27) நடைபெற்றது. விழாவில் பழவிளை கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ராமபிரதாப் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் ஒப்பித்தார்.அந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.

News January 28, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று காலை 10 மணிக்கு கூட்டுறவு மீதான மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்தும் கூட்டுறவு வங்கிகளில் தொழில்நுட்பம் மேம்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வலியுறுத்தியும் இந்தியன் வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிகிறார்கள். மாலை மணி வில்லுக்குறி சந்திப்பில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும். 

News January 28, 2025

குமரி ஓட்டலில் தேங்காய் சட்னி நிறுத்தம்

image

குமரி மாவட்டத்தில் தற்போது தென்னைமரம் நோய்த்தாக்குதலுக்குள்ளாகி வருவதால் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் சராசரியாக ரூ.50 விற்ற தேங்காய் விலை தற்போது மொத்த விற்பனை கடைகளில் ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80 விலையில் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் சிறு ஓட்டல்களில் தேங்காய் சட்னியும் நிறுத்தப்பட்டுள்ளது.

News January 27, 2025

கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு 

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, அவர்கள் நாளை 28-ம்தேதி காலை 09.30 மணிக்கு வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்கள். இதில் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர

News January 27, 2025

கன்னியாகுமரி எஸ்.பி. அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதாக புகார்கள் வந்துள்ளது.இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

நாகர்கோவில் நாகராஜா கோவில் தைப்பெரும் திருவிழா!

image

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் தைப்பெரும் திருவிழா அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 3ஆம் தேதி காலை 6:30 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கொடியேற்று நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடு போன்றவைகள் நடைபெறுகிறது. 11ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!