India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
15வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நாளை (25.01.2025) காலை 9.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக முகப்பிலிருந்து புறப்படும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் தெ.தி இந்துக்கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1,2 மாம்பழத்துறை ஆறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு பிப்.,28ஆம் தேதி அணைகள் மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் பிப்ரவரி 28ஆம் தேதி அணைகள் மூடப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்மீனவர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரில் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். *மீனவ நண்பர்களுக்கு பகிரவும்*
குமரி மாவட்டத்தில் பன்றி பண்ணைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பு உள்ள இடங்களில் பன்றி பண்ணைகளை அகற்றுவதில் தவறு இல்லை. ஆனால் எவ்வித எதிர்ப்பும் இல்லாத பன்றி பண்ணைகளை அகற்ற உத்தரவிடுவது ஏற்புடையது அல்ல. பன்றி பண்ணைகளில் பணிபுரியும் ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைக்காதீர்கள் என விசிக மாவட்ட செயலாளர் அல்காலித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் நேற்று கூறியதாவது, காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக குழு ஒன்று அமைத்து அதன் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆண்டு முதல் இதுவரை வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.45 லட்சம் வனத்துறையால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமரன் புதூர் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சம் இழப்பு ஏற்பட்டதால் கருப்பசாமி தற்கொலை செய்ததாக நேற்று(ஜன.23) தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி சாமி நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, “கோவிலில் ஓவியங்கள் முழுமை பெறாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தற்போது கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த ஓவியங்களை முழுமையாக வரைவது தொடர்பாக கோரிக்கை விடுத்தால் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
மருத்துவர் சமுதாய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனி சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று(ஜன.24) சலூன் கடைகளை அடைத்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு குமரி மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை ஆதரவு தெரிவித்து, இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#இன்று(ஜன.24) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 52வது நாளாக கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரியில் பாரம்பரிய சித்த மருத்துவ 2வது நாள் மாநாடு நடைபெறுகிறது.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்து உள்ளது. இங்கு தைத்திருவிழா கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று(ஜன.23) பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அய்யா வைகுண்ட சாமி எழுந்தருளி வீதிகளில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
Sorry, no posts matched your criteria.