India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 597 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 151 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 683, பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 374 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 234 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
#இன்று(ஜன.26) காலை 9 மணிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சாசனமாக ஏற்றுக்கொண்ட நாளை நினைவு கூறும் வகையில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக மாலை அணிவித்து மரியாதை செய்கிறது.#மாலை 4 மணிக்கு காந்தி, அம்பேத்கரை போற்றும் வகையில் காங்., சார்பில் முன் சிறை சந்திப்பில் பாதயாத்திரை.#மாலை 5 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட விளாத்துறை பகுதியில் மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஏர்டெல் நிறுவனம் டவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று(ஜனவரி 25) சம்பந்தப்பட்ட பகுதிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.
குமரி மாவட்டத்தில் போலீசாருக்கு வெளிப்படையான மாறுதலுக்கான கவுன்சிலிங் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பணி மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் என மொத்தம் 417 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கான பணி மாறுதல் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என் கூறப்படுகிறது.
குமரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் பிப்ரவரி மாதம் கோழி கழிச்சல் நோய் இருவார தடுப்பு ஊசி முகாம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் டோஸ் கோழி கழிச்சல் நோய்க்கு போடுவதற்கு விளக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தடுப்பூசியை கோழிகளுக்கு போட்டுபயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளார்
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் குழும போலீசார் அதி விரைவுப் படையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 68 கிலோ மீட்டர் தூர கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் சந்தேகத்திற்கிடமானவர்கள் யாராவது வந்தால், அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
#இன்று(ஜன.25) காலை 9:30 மணிக்கு விவேகானந்தர் கேந்திர வளாகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு 3வது நாள் நிகழ்வில் சபாநாயகர் பங்கேற்கிறார்.#மாலை 5 மணிக்கு ஆற்றூர் சந்திப்பில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.#மாலை 6 மணிக்கு நாகர்கோவிலில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.#மாலை 5.30 மணிக்கு கொட்டாரம் சந்திப்பில் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
நாடு முழுவதும் இன்று(ஜன.25) தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாம் வாக்களிக்கவில்லை எனில் நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது மிக முக்கியமான விஷயம் என்பதை தேசிய வாக்காளர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது என கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ அனைவருக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.