India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி கடலில் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. 13ஆம் தேதிக்குள் விருப்பம் உள்ள நிறுவனங்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படகுகள் மூலம் 23.11 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் தென்கொடியான குமரியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரயில்வே துணை நிலைய கட்டிடம், ரயில்வே பாதுகாப்பு கட்டிடம், டெர்மினல் கட்டிடம் போன்றவை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்கான ஓய்வு வரையும் கட்டப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அவரிடம் அப்போது பொதுமக்கள் சார்பில் 385 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கேரளாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு 7 கிலோ எடையில் தங்க விக்ரஹம் வழங்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில் அந்த விக்கிரகத்தை இன்று(பிப்.3) குமரி பகவதி அம்மன் கோவிலில் நேரில் வந்து வழங்கினார். அதனை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி பத்துகாணியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் மதுக்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை தட்டி கேட்டதால் அனில் குமாரை அவரது மனைவி தனியா மற்றும் பாஜ பிரமுகர் ஆகியோர் தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று ஆருகானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தனியா மற்றும் பாஜ பிரமுகர் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
குமரியில் சிவராத்திரியை முன்னிட்டு இம்மாதம் 20ஆம் தேதி சிவாலய ஓட்டம் நடக்கிறது. 108 கிலோமீட்டர் தூரம் ஓடும் இந்த ஓட்டத்தின் போது பக்தர்கள் கையில் விசிறி கொண்டு வீசியவாறு கோவிந்தா கோபாலா என்று கோஷத்துடன் வழிபடுவது வழக்கம். திருமலை சிவன் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டம் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பண்ணிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, வழியாக திருநட்டாலும் சென்றடையும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள்அருகில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மீறி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கன்னியாகுமரி பல்வேறு மக்கள் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறேன்; மேலும் அமைச்சர்களை நேரில் சந்தித்தும், கடிதம் வாயிலாகவும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது; ஆனால் அவற்றை குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
(பிப்ரவரி02) கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள கனரக வாகனங்களைநிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட, நேரத்தை மீறி வாகனங்களை இயக்கினால் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், வாகனங்களை அதிவேகத்தில் இயக்கினால் குண்டர் சட்டம் பாயும் எனவும், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களை 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அறிவுரை கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்களை காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை, வணிகவரித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களை தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று ஆட்சியர் அழகும் மீனா நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.