India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்றின் வருகை காரணமாக குமரி மாவட்டத்தில் மேக கூட்டங்கள் இன்றி பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன்படி, குமரியில் இன்று(பிப்.6) அநேக இடங்களில் வெப்பநிலை 34°F முதல் 36°F வரை பதிவாகும். குறிப்பாக, திற்பரப்பு, அருமனை, பேச்சிப்பாறை, களியல், திருவட்டார் பகுதிகளில் 100 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்ச அளவாக மேல் புறத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பேச்சி பாறை பகுதியில் 35 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 34 டிகிரி செல்சியஸ், நெய்யூர் 34 டிகிரி, திருப்பதி சாரம் 33 டிகிரி, நாகர்கோவில் 33 டிகிரி, கல்லார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க அஞ்சத்துறை பிப்ரவரி 1 முதல் 28 வரை பார்சல் சிறப்பு முகாம் நடத்துகிறது. இந்த முகாம் குமரி கோட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட வகை பார்சல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும்” என அதில் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் சுரத் சிங் நாளை(பிப்.6) குமரி வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குமரி வரும் அவருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் குமரியில் உள்ளசுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
குமரியில் குழந்தைகள் அறிவு திருவிழா வருகிற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.இந்த விழாவில் ஓவிய போட்டி, மழலை பாடல் மற்றும் கதை சொல்லும் போட்டி, கற்பனை திறன் போட்டி, ஏபிசிடி வரிசைப்படுத்தும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.*உங்கள் பக்கத்து வீட்டு பெற்றோருக்கு பகிரவும்*
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இன்று 92 டிகிரி வெப்ப சூழல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் பொதுமக்கள் குடை பிடித்து நடந்து செல்வதையே காண முடிகிறது. இதேபோல் மக்கள் அதிகமாக கூடும் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட், செம்மங்குடி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் பணம் வாங்கியவர்களை மிரட்டி அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் நிலையில், கந்து வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்ட மலையோர பகுதிகளான களியல், கடையால் சுற்று வட்டார பகுதிகளிலும் பெரும்பாலும் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரப்பர் பால் மற்றும் சீட்டின் விலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தற்போது இலையுதிர் காலமும் தொடங்கிவிட்டதால் ரப்பர் மரத்தில் உள்ள இலைகளும் உதிர்ந்து வருகின்றன. மேலும் ரப்பர் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று கூறியதாவது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் சீல் வைக்கப்படும். சுகாதாரத்தை பேணிக்காக்க உணவகங்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திறந்த நிலையில் தின்பண்டங்களை வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 405 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 77 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 788 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 412 கன அடி பெருஞ்சாணி அணைக்கு 87 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.