Kanyakumari

News February 15, 2025

குமரி – திருவனந்தபுரம் ரயில் பாதைக்கு 30 ஹெக்டேர் தேவை

image

குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 2வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகப் பகுதியில் 46.39 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் இதுவரையிலும் 16.41 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 30 ஹெக்டேர் நிலம் இன்னும் ஆர்ஜிதம் செய்ய வேண்டியது உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

News February 15, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.15) காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் ரப்பர் தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 71வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் இளங்காமணிபுரம் பகுதியில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடக்கிறது.#மாலை 4:30 மணிக்கு SDPI மாநாடு விளக்க பொதுக்கூட்டம் குளச்சல் சந்திப்பில் நடக்கிறது.

News February 15, 2025

பட்டதாரிகளுக்கு ரூ. 1 கோடி திருமண உதவி – அமைச்சர் கீதாஜீவன்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1 கோடி திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10 லட்சம் திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் நேற்று(பிப்.14) நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

பட்டதாரிகளுக்கு ரூ. 1 கோடி திருமண உதவி -அமைச்சர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1,00,50,000/- திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10,00,000/- திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூ.1,10,50,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்று அமைச்சர் கீதா ஜீவன் நேற்று நாகர்கோவிலில் கூறினார்.

News February 15, 2025

நாகர்கோவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பிப் 14) அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நாகர்கோவிலில் பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 35 டிகிரி செல்சியஸும், மேல்புறம் பகுதியில் 35 டிகிரி செல்சியஸும், நட்டாலத்தில் 33 டிகிரி செல்சியஸும், கன்னியாகுமரியில் 32 டிகிரி செல்சியஸும், கிள்ளியூர் மற்றும் நெய்யூர் பகுதிகளில் தலா 31 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்தது.

News February 15, 2025

நான்கு நாட்களாக ரப்பர் விலையில் மாற்றமில்லை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10ம்தேதி ரப்பர் விலை (100 கி) 18,700 ரூபாயாக இருந்தது. 11ஆம் தேதி அது 19,000 ரூபாயாக உயர்ந்தது. இன்று வரை ரப்பர் விலையில் மாற்றம் இல்லாமல் 19 ஆயிரம் ரூபாயாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இது ரப்பர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

News February 15, 2025

குமரியில் ஒரே நாளில் 89 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (பிப். 13) மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த நான்கு பேர், அதிவேகமாக அபாயகரமாக வாகனம் ஓட்டி வந்த 40 பேர், கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்போது 16 டயர்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு மீறி ஓட்டி சென்ற 45 பேர் உட்பட 89 வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது என மாவட்ட எஸ். பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

3 POCSO வழக்குகளில் தண்டனை; மாவட்ட எஸ்.பி. பாராட்டு

image

குமரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் 3 POCSO வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உறுதுணையாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் இவ்வழக்கின் விசாரணையை கண்காணித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர காரணமாக இருந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

சோனியா பெயரில் உள்ள இடத்தில் காமராஜ் பவன் திறப்பு விழா

image

பள்ளியாடி ரத்னா சிட்டி ஃபண்ட் அதிபர் காலம் சென்ற கனகராஜ். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரில் எழுதி கொடுத்த இடம் குழித்துறையில் உள்ளது. கிட்டத்தட்ட 18-ஆண்டுகளுக்கு பின் சோனியா காந்தியின் பெயரில் இருக்கும் இடத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் காமராஜ் பவன் என்ற பெயரில் எதிர் வரும் 16-ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.

News February 14, 2025

முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை

image

கடந்த 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை விடுதலை செய்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
1996-2001 ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் வருமானத்திற்கு அதிகமாக ₹17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!