India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் களிமண் மணல் பாறைகள் குளங்கள் போன்றவற்றால் கீழே இருந்து தரைமட்டம் வரை நிரப்ப வேண்டும்; ஆழ்துளை கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்; ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கிணற்றில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்; விபத்துகளை தடுக்க இதுபோன்ற 10 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஆயிரம் முதல்வர் மருத்துவங்கள் திறக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி 36 முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. கூட்டுறவு சங்கம் மூலம் 13 மருந்தகங்களும் தனிநபர் மூலம் 23 மருந்தகங்களும் தொடங்கப்பட உள்ளது.
குமரி மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 20-ம் தேதி அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 21ஆம் தேதி அன்றும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பெருங்குற்றங்கள் மற்றும் திருட்டு குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு கேமரா பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டங்கள் நடக்கும் 2 நாட்கள் டாரஸ் லாரிகளை குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். உடன் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் கார்த்திக். மாநகர் பொதுச் செயலாளர் கார்கில்மணிகண்டன், செயலாளர்கள் ரமேஷ் காசிவிஸ்வநாதன், பாஜக ரூபின் பலர் உடனிருந்தனர்.
குமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் 6-வது புத்தகத் திருவிழா இம்மாதம் 19ஆம் தேதி நாகர்கோவில் SLB மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவில் சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம், 120க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
குமரி பாராளுமன்ற உறுப்பினராக விஜய் வசந்த் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மத்திய அரசால் 2025ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்வதற்காக சபாநாயகரால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் உறுப்பினராக விஜய் வசந்த் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று(பிப்.15) குலசேகரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5,482 மாணவர்கள், 5,782 மாணவிகள் என 11 ஆயிரத்து 264 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5,048 மாணவர்கள், 5,703 மாணவிகள் என 10 ஆயிரத்து 751 பேரும் மொத்தமாக 22 ஆயிரத்து 15 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.