Kanyakumari

News February 22, 2025

ரயில்வே நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி கண்டனம்

image

‘இந்திய ரயில்வேயில் ஏழை எளிய மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் அதிகமாக பயணம் செய்கிறார்கள்; எனவே அந்த வகை பெட்டிகளின் எண்ணிக்கையை கூட்டுவது விட்டுவிட்டு குறைக்கும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது; சாதாரண மக்கள் அதிகம் நம்பும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது’ என இன்று (பிப் – 21) விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

குமரி மாவட்டத்திற்கு 3 உள்ளூர் விடுமுறைகள்

image

மகா சிவராத்திரி முன்னிட்டு இம்மாதம் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும், அடுத்த மாதம் 4 தேதி சாமிதோப்பு வைகுண்ட சாமி பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதுஃ இதை போல் அடுத்த மாதம் 11-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. *எல்லோருக்கும் பகிருங்கள் மக்களே*

News February 21, 2025

உயிரிழந்த மாணவ மாணவியர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்: CM

image

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த குமரி தனியார் கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.21) தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News February 21, 2025

‘பசுமை சாம்பியன் விருது’ 100 பேருக்கு ரூ.1 லட்சம் பண முடிப்பு!

image

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 100 பேருக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் முடிப்பு வழங்க உள்ளது. இந்த விருது பெற, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குமரி கலெக்டர் நேற்று(பிப்.20) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.21) பகல் 1.15 மணிக்கு தனியார்மயத்தை கைவிடக் கோரி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ் ஆர் எம் யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது#மாலை 5 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தென் மண்டல மாநாடு இளங்கடையில் நடக்கிறது.#மாலை 5.30 மணிக்கு போதுமான பணியாளர்களை நியமனம் செய்யக்கோரி வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 21, 2025

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 120 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 688 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 359 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 58 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News February 20, 2025

குமரி மக்களுக்கு கலெக்டர் தெரிவித்த முக்கிய செய்தி

image

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சினைக்காக என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். தினமும் மதியம் 3 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மதியம் பார்க்க முடியாத பொதுமக்கள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை என்னை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News February 20, 2025

குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, என்.பி. சானல் உள்ளிட்ட பாசன கால்வாய்களை சீரமைப்பதற்காக அரசு ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார். ஏப்ரல் மே மாதங்களில் தான் இந்த பணிகளை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் கால்வாய்களை சீரமைப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

News February 20, 2025

குமரியில் பெண் வடிவில் விநாயகர்; உங்களுக்கு தெரியுமா?

image

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பெண் உருவத்தில் விநாயகர் உள்ளார். பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு காட்சி தருகிறார். இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள இந்த சாமியை 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என கூறப்படுகிறது. பெண் விநாயகர் கணேஷினி, விநாயகி, விக்னேஸ்வரி ஆகிய பெயரில் அழைக்கப்படுகிறார்.*SHARE 2 FRDS* 

News February 20, 2025

குமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்!

image

குமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தங்கள் பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த வேண்டும் என்றால் 98947 74410 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அருமனை உட்பட 37 தபால் நிலையங்களில் ஆதார் சேவை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!