Kanyakumari

News February 21, 2025

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 120 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 688 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 359 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 58 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News February 20, 2025

குமரி மக்களுக்கு கலெக்டர் தெரிவித்த முக்கிய செய்தி

image

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சினைக்காக என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். தினமும் மதியம் 3 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மதியம் பார்க்க முடியாத பொதுமக்கள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை என்னை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News February 20, 2025

குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, என்.பி. சானல் உள்ளிட்ட பாசன கால்வாய்களை சீரமைப்பதற்காக அரசு ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார். ஏப்ரல் மே மாதங்களில் தான் இந்த பணிகளை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் கால்வாய்களை சீரமைப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

News February 20, 2025

குமரியில் பெண் வடிவில் விநாயகர்; உங்களுக்கு தெரியுமா?

image

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பெண் உருவத்தில் விநாயகர் உள்ளார். பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு காட்சி தருகிறார். இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள இந்த சாமியை 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என கூறப்படுகிறது. பெண் விநாயகர் கணேஷினி, விநாயகி, விக்னேஸ்வரி ஆகிய பெயரில் அழைக்கப்படுகிறார்.*SHARE 2 FRDS* 

News February 20, 2025

குமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்!

image

குமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தங்கள் பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த வேண்டும் என்றால் 98947 74410 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அருமனை உட்பட 37 தபால் நிலையங்களில் ஆதார் சேவை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

News February 20, 2025

குமரி மாணவர்கள் உயிரிழப்பு – MLA தளவாய் சுந்தரம் இரங்கல்

image

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவ – மாணவியர் கேரள மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா சென்ற நிலையில், பயணம் செய்த பேருந்து நேற்று(பிப்.19) விபத்துகுள்ளானது அறிந்து ஆற்றொண்ணா துயரம் அடைந்தேன். இத்துயரமான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

News February 20, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.20) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர் மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டு 75வது நாளாக தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஒற்றப்பனை விளை முதல் ஆலஞ்சி வரையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு CPIML லிபரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 20, 2025

அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும்: கலெக்டர் அழகு மீனா

image

நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் பேசிய கலெக்டர் அழகு மீனா, சரித்திரம் படைத்த தலைவர்கள், உலக தொழில் முனைவோர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் புத்தகங்களை வாசிக்கிறவர்களாக இருந்ததால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் புத்தகம் வாசிக்கும் பழகத்தினை மறந்து வருகிறோம். அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என்றார்.

News February 20, 2025

குமரி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்

image

அருமனை தனிப்படை உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் 2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற சலீம் ராஜ், அப்துல் ஷெமி, அனீஷ், லிபின் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்

News February 19, 2025

குமரி மாணவ மாணவிகள் உயிரிழப்பு: எம்பி இரங்கல் செய்தி

image

“நாகர்கோவிலை சேர்ந்த 39 மாணவர்கள் கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்; சம்பவ இடத்தில் 2 மாணவிகளும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 1 மாணவரும் உயிரிழந்தார்கள் என்ற செய்தி மனதை உலுக்கியது; அவர்களின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக” எம்பி விஜய் வசந்த் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!