India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொப்பரை விலை அதிகமாக உள்ளதால் குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் இயங்கி வரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் கடந்த மூன்று மாதமாக உற்பத்தி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரம் கூட்டு மையத்தில் உள்ள அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
தோவாளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனெனில் பயிர் வளர்ச்சிக்கு மண் எவ்வளவு பங்கு உள்ளதோ, அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு. எனவே பாசன நீரை பரிசோதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திருப்பதி சாரத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தை அணுகி விவசாயிகள் நீரின் தரத்தை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நீர்வளத்தை காப்பது மற்றும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தண்ணீரின் தேவை, சிக்கனம் குறித்துமு் எடுத்துரைக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார். *ஊராட்சி மக்களுக்கு பகிரவும்*
குமரிமாவட்டத்தில் கோடை மழை பல்வேறு பகுதிகளில் பெய்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப் பாறை பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பத்மநாபபுரம் 12, பரளி ஆறு 10, தும்புக்கோடு 10, சிற்றாறு ஒன்று 9, மைலார் 8, திற்பரப்பு 6, சிவலோகம் 5, தடிக்காரன் கோணம் 4, சிற்றாறு இரண்டு 3, குழித்துறை டவுன் 2, தக்கலை 2, பாலமோர் 2, மாம்பழத்துறையாறு அணை 2, மணலோடை 2, கல்லார் 2, அருமனை 2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று வருமான வரி சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் வருமான வரி தலைமை ஆணையர் வசந்தன் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி வருமானவரி மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது என்றும், இதில் தமிழகத்தின் பங்கு 6.2%. குமரி மாவட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருகிறது என்று தெரிவித்தார்.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தனது 93வது பிறந்த நாளை நேற்று(மார்ச் 19) கொண்டாடினார். உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகளும் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அவரை சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கிரிஸ்டல் ஜாய் லெட் தலைமையில் இது நடைபெற்றது. பொதுத்தேர்வு தொடர்பான அறிவுரைகளை முறையாக கண்காணிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
குமரி மக்களே, வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க,★ லோசான அடைகளை அணிவது நல்லது.★ டீ,காபி, மது வகைகளை தவிர்ப்பது நல்லது.★ தினமும் 2 நேரம் குளிப்பது நல்லது.★ எலுமிச்சைசாறு, நொங்கு, மோர் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.★ பகலில் வெயிலில் அதிகம் போகாமல் நிழலான காற்றோட்டமான இடத்தில் இருத்தல் வேண்டும்.
குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ்பி ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் 10 நாட்களில் 4 கொலைகள் நடைபெற்று உள்ளது. பழைய குற்றவாளிகள், ரவுடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் காட்டக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 20) 28.66அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.05அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 122 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 23 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.