India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிர்வகித்து வரும் விவேகானந்தர் கேந்திர நிறுவனம், 150 ஏக்கர் நிலப் பரப்பளவில் கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்நிலையில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று(அக்.,17) முதல் தொடங்கப்பட்டுள்ளது. 12.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.
குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து அக்.,19 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். SHARE IT.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 373 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 193 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 547 கன அடியும் பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 505 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 267 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குமரி மாவட்ட திட்டக்குழுவின் கூட்டம் அக்டோபர் 23ம் தேதி காலை 11.30 மணிக்கு நாகர்கோவில் வருவாய் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில், கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நீர்வழி பாதை அமைத்து சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி போக்குவரத்து அமைப்பது, நீராதாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தலைவர் மெர்லியன்ட் தாஸ் தெரிவித்தார்.
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது,“குமரி 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீமில் உள்ள கால்நடை மருத்துவப்பிரிவை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தலாம்; அவரச தேவைக்கு 1962 எண்ணில் அழைத்தால் கால்நடை இருப்பிடம் வந்து கால்நடைக்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; இது போன்ற காலங்களில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் பரவலாக மலையோர பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன்படி, சுருளோட்டில் 29.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாலமோரில் 22.4, கல்லாரில் 20, தடிக்காரன் கோணம் 19.6, பூதப்பாண்டி 15.2, பெருஞ்சாணி 11, புத்தன் அணை 9.6, செண்பகராமன் புதூர் 8.4, முக்கடல் அணை 8.4, கோதையாிரல் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது இது தவிர அடையாமடை, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிமுக மீனவரணி இணை செயலாளர் பசலியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் தாது மணல் எடுக்க கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; அதனை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; மீனவர் விரோதத் திட்டங்களை தமிழக அரசு அனுமதித்தால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்ட கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் குமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் போலீஸ் காவலையும் மீறி கடலில் இறங்கியநிலையில் அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.